அணு ஆயுத நாடுகள் மோதிக்கொள்வது கவலையளிக்கிறது: ஜே.டி.வான்ஸ்
இந்தியாவும், பாகிஸ்தானும் மோதிக்கொள்வது கவலையளிப்பதாக அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் தெரிவித்துள்ளார்.
போர் பதற்றம்
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.
இருநாடுகளின் அரசுகளும் தங்கள் இராணுவ படைகளை தயார் நிலையில் வைத்திருக்கின்றன.
இந்த நிலையில் அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் இரு நாடுகளின் மோதல் குறித்து பேசியுள்ளார்.
ஜே.டி.வான்ஸ்
அவர் கூறுகையில், "பிராந்திய மோதலுக்கு வழிவகுக்காத வகையில் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுக்க வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். குறிப்பாக, இரண்டு அணு ஆயுத சக்திகளுக்கு இடையே மோதல் ஏற்படுவது மிகவும் கவலையளிக்கிறது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அரசுகளுடன் நாங்கள் நெருங்கிய தொடர்பில் இருக்கிறோம். அதோடு தங்கள் பிரதேசத்தில் செயல்படும் பயங்கவாதிகள் வேட்டையாடப்படுவதை உறுதி செய்ய இந்தியாவுடன் பாகிஸ்தான் ஒத்துழைக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |