என் நாட்டு மக்களை பார்க்கும் போது மனம் கஷ்டப்படுகிறது! இலங்கையை சேர்ந்த பிரபல நடிகை வேதனை
இலங்கையை சேர்ந்த பிரபல நடிகை ஜாக்குலின் பெர்ணாண்டஸ் சொந்த நாட்டின் நிலைமை குறித்து கவலை தெரிவித்துள்ளார்.
2006ம் ஆண்டு மிஸ்ஸ்ரீலங்கா பட்டம் வென்றதும் மொடலிங் துறையில் முன்னணிக்கு வந்தார் ஜாக்குலின். அதன்பிறகு பாலிவுட் நடிகை ஆனார். பாலிவுட்டில் பல ஹிட் திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து அவர் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தியில் வெளியான சாஹோ படத்திலும் நடித்திருந்தார்.
தற்போது இலங்கையில் நடந்து வரும் பொருளாதார நெருக்கடி, அரசியல் குழப்பங்கள், விலைவாசி உயர்வு, மக்கள் போராட்டம் குறித்து அவர் கவலை தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: 42 வயதில் 40 வயதான நடிகையை மணக்கும் சிவகார்த்திகேயன் பட நடிகர்! காதலே காதலே
இதுகுறித்து அவர் கூறுகையில், எனது நாட்டு மக்களை பார்க்கும்போது மனம் கஷ்டப்படுகிறது. இலங்கை குடிமகளாக இருப்பதால் இதையெல்லாம் பார்க்கும்போது மனம் வருத்தமாக இருக்கிறது. தற்போதைய சூழல்கள் குறித்து பலரும் பலவிதமான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
அவசரப்பட்டு எந்த தீர்ப்பும் சொல்ல வேண்டாம் என்று அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். என் நாட்டுக்காக, மக்களுக்காக 2 நிமிடம் அமைதியாக பிரார்த்தனை செய்தால் கூட போதும் என கூறியுள்ளார்.
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        