ராஜஸ்தானுக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி கொடுத்த இருவர்: அடுத்து நடந்த ட்விஸ்ட்
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் விரைவாக இரண்டு விக்கெட்டுகளை இழந்தது.
குவாலிஃபையர் 2
ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான குவாலிஃபையர் 2 போட்டி நியூ சண்டிகரில் நடந்து வருகிறது.

நாணய சுழற்சியில் வென்ற ராஜஸ்தான் அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்து களமிறங்கியது. தொடக்க வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 1 ரன் எடுத்த நிலையில் சிராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் துருவ் ஜூரேலின் (7) விக்கெட்டை ரபாடா கைப்பற்றி மிரட்டினார்.
ஜடேஜா அதிரடி
ராஜஸ்தான் ராயல்ஸ் 9 ஓட்டங்களுக்கு 2 முக்கிய விக்கெட்டுகளை இழக்க, யாரும் எதிர்பாராத விதமாக ரவீந்திர ஜடேஜா களத்திற்குள் வந்தார்.
அவர் அதிரடியாக ஆட்டத்தைத் தொடங்க, மறுபுறம் தடுமாறிக் கொண்டிருந்த வைபவ் சூர்யவன்ஷியும் ரன்வேட்டையில் இறங்கினார்.
இவர்களின் ஆட்டத்தின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பவர்ப்ளே முடிவில் 70 ஓட்டங்கள் குவித்தது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |