கேப்டன் பொறுப்பிலிருந்து விடுவிக்குமாறு கேட்ட பண்ட்: நிறைவேற்றிய அணி நிர்வாகம்
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணித்தலைவர் பதவியில் இருந்து ரிஷப் பண்ட் விடுவிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புள்ளிப்பட்டியலில் கடைசி இடம்
நடப்பு ஐபிஎல் தொடரில், மோசமாக செயல்பட்ட லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தைப் பெற்றது.
மொத்தம் 14 போட்டிகளில் விளையாடிய லக்னோ அணி மும்பை இந்தியன்ஸைப் போல 4 வெற்றிகளை பெற்றிருந்தாலும், ரன்ரேட் அடிப்படையில் 10வது இடத்திற்கு சென்றது.
அணித்தலைவர் ரிஷப் பண்ட் 14 போட்டிகளில் 312 ஓட்டங்கள் எடுத்தார். இதில் அவரது சராசரி 28.36 மற்றும் ஸ்ட்ரைக்ரேட் 138.05 ஆகும்.
அணித்தலைவர் பதவியில் இருந்து விடுவிப்பு
இந்த நிலையில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸின் அணித்தலைவர் பதவியில் இருந்து ரிஷப் பண்ட் விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியாகியுள்ள அறிவிப்பில், "LSG அணியின் தலைவர் பொறுப்பில் இருந்து தன்னை விடுவிக்குமாறு ரிஷப் பண்ட் கோரிக்கை விடுத்துள்ளதாகவும், அவரது அந்தக் கோரிக்கையை அணி நிர்வாகம் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் நாங்கள் முறையாக அறிவிக்கிறோம்.
ரிஷப் இந்தக் கோரிக்கையுடன் அணி நிர்வாகத்தை அணுகினார்; நாங்கள் அதனை மிகுந்த மரியாதையுடன் ஏற்றுக்கொண்டோம்" என லக்னோ அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Official announcement. pic.twitter.com/7WeOwpkDr6
— Lucknow Super Giants (@LucknowIPL) May 29, 2026
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |