டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் யாரும் செய்யாத சாதனையை படைத்துள்ள ஜடேஜா
2009 ஆம் ஆண்டு, இலங்கைக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் அறிமுகமான ரவீந்திர ஜடேஜா, இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய ஆல்ரவுண்டராக வலம் வருகிறார்.
தற்போது, சர்வதேச கிரிக்கெட்டில் யாரும் செய்யாத சாதனையை ரவீந்திர ஜடேஜா படைத்துள்ளார்.
நீண்ட நாட்கள் முதலிடம்
ஐசிசி, சமீபத்தில் புதுப்பிக்கப்பட்ட டெஸ்ட் போட்டியின் ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசையில், ஜடேஜா 400 மதிப்பீட்டு புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.
இதன் மூலமாக ஐஐசி ஆல்ரவுண்டர் தரவரிசையில், நீண்ட நாட்களாக(1151 நாட்கள்) தொடர்ந்து முதலிடத்தில் இருக்கும் வீரர் என்ற பெருமையை ரவீந்திர ஜடேஜா பெற்றுள்ளார்.
20022 ஆம் ஆண்டு மொஹாலியில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், ஆட்டமிழக்காமல் 175 ஓட்டங்கள் எடுத்து, 9 விக்கெட்களை கைப்பற்றினார்.
இதன் மூலம், அப்போது முதலிடத்தில் இருந்த மேற்கிந்திய தீவு கிரிக்கெட் வீரர் ஜேசன் ஹோல்டரை, பின்னுக்கு தள்ளி ஜடேஜா முதலிடத்திற்கு முன்னேறினார்.
இதுவரை 80 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஜடேஜா, 4 சதம், 22 அரை சதங்களுடன் 3,370 ஓட்டங்கள் எடுத்துள்ளார். மேலும், 323 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார்.
வங்கதேச வீரர் மெஹிடி ஹசன் மிராஸ், 327 மதிப்பீட்டு புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |