ஆசிய கோப்பை தொடரில் இருந்து ரவீந்திர ஜடேஜா விலகல்: மாற்று வீரரை அறிவித்தது பிசிசிஐ
காயம் காரணமாக ஜடேஜா ஆசிய கோப்பை தொடரில் இருந்து விலகல்.
மாற்று வீரராக அக்சர் பட்டேல் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
துபாயில் நடைபெற்று வரும் 2022ம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து இந்திய அணியின் ஆல்-டவுண்டர் ரவீந்திர ஜடேஜா காயம் காரணமாக திடீரென விலகியுள்ளார்.
துபாயில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை தொடரின் ஏ பிரிவில் இந்திய அணி விளையாடி வருகிறது, இதில் இதுவரை பாகிஸ்தான், மற்றும் ஹாங்காங் ஆகிய இரண்டு அணிகளுடனும் மோதி இந்திய அணி தனது அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.
Credit: BCCI
இதன்மூலம் இந்திய அணி சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது. இந்தநிலையில் இந்திய அணியின் முக்கியமான ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவின் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆசிய கோப்பை தொடரில் இருந்து திடீரென விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரவீந்திர ஜடேஜா மாற்றாக அக்சர் பட்டேல் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
NEWS - Axar Patel replaces injured Ravindra Jadeja in Asia Cup squad.
— BCCI (@BCCI) September 2, 2022
More details here - https://t.co/NvcBjeXOv4 #AsiaCup2022
வரவிருக்கும் அக்டோபர் மாதம் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ளதால் அதற்கு அவர் தயாராக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பிசிசிஐ இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
கூடுதல் செய்திகளுக்கு: எரிவாயு நெருக்கடியில் அமெரிக்கா லாபம் ஈட்டுகிறது...ஐரோப்பிய நாடுகளுக்கு சீனா எச்சரிக்கை!
ஏற்கனவே ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் காயம் காரணமாக முன்னணி வேகப்பந்து வீச்சாளர் பும்ரா விலகியிருந்த நிலையில், தற்போது ஆல்-ரவுண்டர் ஜடேஜாவும் விலகி இருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.