எரிவாயு நெருக்கடியில் அமெரிக்கா லாபம் ஈட்டுகிறது...ஐரோப்பிய நாடுகளுக்கு சீனா எச்சரிக்கை!
ஐரோப்பிய ஒன்றியத்தில் நிலவி வரும் எரிசக்தி நெருக்கடியை கொண்டு அமெரிக்கா அதிக லாபம் பார்க்கிறது.
பொருளாதாரத் தடைகள் விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்தும் என எச்சரிக்கை.
ஐரோப்பிய ஒன்றியத்தில் நிலவி வரும் எரிசக்தி நெருக்கடியை கொண்டு அமெரிக்கா அதிக லாபம் ஈட்டி வருவதாக சீன வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீதான போர் நடவடிக்கை கண்டிக்கும் விதமாக ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் மற்றும் போலந்து போன்ற நாடுகள் ரஷ்யாவிற்கு எதிரான பல அடுக்கு பொருளாதார தடைகளை விதித்து தனிமைப்படுத்துதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதற்கு பதிலடி தரும் விதத்தில் ஐரோப்பிய நாடுகளுக்கு வழங்கி வந்த எரிசக்தி விநியோகத்தை ரஷ்யாயும் பாதிக்கும் மேற்பட்ட அளவில் குறைத்தது.
Axel Schmidt/Reuters
இதனால் தற்போது பிரித்தானியா ஜெர்மனி போன்ற நாடுகள் கடுமையான எரிசக்தி தட்டுப்பாட்டை சந்தித்து வருவதுடன், கடுமையான விலையேற்றத்தையும் சந்தித்து வருகின்றது.
இந்தநிலையில், செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியன், ஐரோப்பிய கண்டத்தில் தற்போது நிலவும் எரிசக்தி நெருக்கடியில் பயன்படுத்தி அமெரிக்கா லாபம் ஈட்டி வருகிறது எனத் தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் தொடர்ந்து வரும் போர் நடவடிக்கையால், அமெரிக்காவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையே எரிவாயு விலையின் வேறுபாடு சாதனை அளவை எட்டியுள்ளது, இதனை கொண்டு அமெரிக்கா அனைத்து வகையிலும் தங்களுக்கான நன்மைகளை அறுவடை செய்து வருகிறது என தெரிவித்தார்.
EPA-EFE/ROMAN PILIPEY
மேலும் ஐரோப்பிய கண்டத்திற்கு திரவமயக்கப்பட்ட இயற்கை எரிவாயுவின் (LNG) தனிப்பட்ட ஏற்றுமதியில் இருந்து $100 மில்லியன் வரை லாபம் ஈட்டலாம் எனவும் அடிகோடிட்டு காட்டினார்.
கூடுதல் செய்திகளுக்கு: ஆண்களின் விந்தணுவில் தயாரிக்கப்பட்ட ஆபரண நகை...கனடா பெண்ணிற்கு குவிந்து வரும் ஆர்டர்கள்!
அத்துடன் ரஷ்யாவிற்கு எதிராக மேற்கத்திய நாடுகள் விதித்து வரும் பொருளாதாரத் தடைகள் உக்ரைன் நெருக்கடியைத் தீர்க்க வழிவகுக்காது, மாறாக விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்தும் என்று அவர் எச்சரித்தார்.