இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட்: ஜடேஜா, கே.எல் ராகுல் விலகல்: மாற்று வீரர்கள் யார்?
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து ஜடேஜா மற்றும் கே.எல் ராகுல் விலகியுள்ளனர்.
முன்னணி வீரர்கள் விலகல்
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது.
முதல் டெஸ்ட் போட்டி ஹைதராபாத்தில் நடைபெற்ற நிலையில் இந்திய அணியை 28 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.
இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 2ம் திகதி விசாகப்பட்டினத்தில் நடைபெற உள்ளது.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னணி வீரர்களான ரவீந்திர ஜடேஜா மற்றும் கே.எல் ராகுல் காயம் காரணமாக 2வது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளனர்.
மாற்று வீரர்கள் அறிவிப்பு
இந்நிலையில் காயம் காரணமாக வெளியேறிய ரவீந்திர ஜடேஜா மற்றும் கே.எல் ராகுலுக்கு பதிலாக புதிய வீரர்களை பிசிசிஐ அறிவித்துள்ளது.
பிசிசிஐ அறிவிப்பு படி, ரவீந்திர ஜடேஜா மற்றும் கே.எல் ராகுலுக்கு பதிலாக சர்பராஸ் கான் மற்றும் இடது கை சுழற்பந்து வீச்சாளர் சௌரப் குமார் மற்றும் ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
உலக பணக்காரர் பட்டியலில் பெர்னார்ட் அர்னால்ட் முதலிடம்: ரூ.25,000 கோடியை 27 நாளில் இழந்த எலான் மஸ்க்
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |