அவுஸ்திரேலியாவை மொத்தமாக உருக்குலைத்த ஜடேஜா! 7 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டல்
இந்திய அணி வீரர் ரவீந்திர ஜடேஜாவின் அபார சுழற்பந்து வீச்சில் அவுஸ்திரேலிய அணி 113 ஓட்டங்களுக்கு சுருண்டது.
மாயாஜால சுழல்
டெல்லியில் தொடங்கிய இந்தியா-அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று மூன்றாவது நாளாக நடந்து வருகிறது.
முதல் இன்னிங்சில் அவுஸ்திரேலியா 263 ஓட்டங்களும், இந்தியா 262 ஓட்டங்களும் எடுத்தன. அதன் பின்னர் ஒரு ரன் முன்னிலையுடன் களமிறங்கிய அவுஸ்திரேலியா, இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 61 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
இந்த நிலையில் மூன்றாவது நாளில் இன்று களமிறங்கிய அவுஸ்திரேலியா அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. டிராவிஸ் ஹெட் 43 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
பின்னர் வந்த ஸ்மித்தும் 9 ஓட்டங்களில் அவரது பந்துவீச்சிலேயே வெளியேறினார். தனது மாயாஜால சுழற்பந்துவீச்சை செயல்படுத்திய ரவீரந்திர ஜடேஜா, அவுஸ்திரேலிய அணியை மொத்தமாக காலி செய்தார்.
Career-best Test figures for Ravindra Jadeja ?#WTC23 | #INDvAUS pic.twitter.com/ikHe85pfez
— ICC (@ICC) February 19, 2023
சுருண்ட அவுஸ்திரேலியா
லபுசாக்னேவை 35 ஓட்டங்களில் வெளியேற்றிய அவர், அலெக்ஸ் கேரி (7), கம்மின்ஸ் (0), லயன் (8) மற்றும் குனமென் (0) ஆகியோரை போல்டு செய்தார்.
இதனால் அவுஸ்திரேலிய அணி 113 ஓட்டங்களுக்கு சுருண்டது. ஜடேஜா 7 விக்கெட்டுகளையும், அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
Ravindra Jadeja was the star of the show as India bowl out Australia for 113.
— ICC (@ICC) February 19, 2023
Can the hosts chase down 115?#WTC23 | #INDvAUS | ? https://t.co/HS93GIyEwS pic.twitter.com/dnjs4pI4ig