ஐபிஎல் தொடரில் இருந்து விலகும் ஜடேஜா? வெளியான தகவல்
காயம் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணித்தலைவர் ரவீந்திர ஜடேஜா விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவராக ஜடேஜா களமிறங்கினார். ஆனால் அவரது தலைமையில் csk படுதோல்வியை சந்தித்தது.
அதனைத் தொடர்ந்து, தன்னுடைய ஆட்டமும் தலைமை பொறுப்பு வகிப்பதால் பாதிக்கப்படுவதாக கூறி, அணித்தலைவர் பொறுப்பில் இருந்து விலகினார்.
இந்த நிலையில் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியின் போது ஜடேஜாவுக்கு காலில் அடிபட்டது. அதனால் டெல்லிக்கு எதிரான போட்டியில் அவர் விளையாடவில்லை. ஜடேஜா ஓய்வில் இருப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது ஐபிஎல் தொடரில் இருந்தே அவர் வெளியேற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சீசனில் ஜடேஜா 116 ஓட்டங்கள் மற்றும் 5 விக்கெட்டுகளை மட்டுமே சாய்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.