இலங்கை உள்ளூர் தொடரை வென்ற திசாரா பெரேரா படை! ஜாஃப்னா ஹாட்ரிக் சாம்பியன்
லங்கா பிரீமியர் லீக் தொடரை மூன்றாவது முறையாக ஜாஃப்னா கிங்ஸ் வென்றுள்ளது.
ஜாஃப்னா - கொழும்பு மோதல்
இலங்கை உள்ளூர் கிரிக்கெட் தொடரான லங்கா பிரீமியர் லீக்கின் 3வது சீசன் நடந்து முடிந்தது. கொழும்பில் நடந்த இறுதிப் போட்டியில் திசாரா பெரேராவின் ஜாஃப்னா கிங்ஸ் அணியும், ஏஞ்சலோ மேத்யூஸின் கொழும்பு ஸ்டார்ஸ் அணியும் மோதின.
முதலில் ஆடிய கொழும்பு அணி 5 விக்கெட் இழப்புக்கு 163 ஓட்டங்கள் எடுத்தது. அதிகபட்சமாக சண்டிமல் 49 ஓட்டங்களும், பொபாரா 47 ஓட்டங்களும் எடுத்தனர்.
ஜாஃப்னா கிங்ஸ் தரப்பில் பெரேரா, பினுரா பெர்னாண்டோ, தீக்ஷணா மற்றும் வெல்லாலகே தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். பின்னர் களமிறங்கிய ஜாஃப்னா கிங்ஸ் அணி 19.2 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 164 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
@OfficialSLC
அவிஷ்கா பெர்னாண்டோ 50 ஓட்டங்களும், சதீரா சமரவிக்ரமா 44 ஓட்டங்களும் எடுத்தனர். கொழும்பு தரப்பில் லக்மால் 3 விக்கெட்டுகளையும், ஹோவெல் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இந்த வெற்றியின் மூலம் ஹாட்ரிக் சாம்பியன் என்ற சாதனையை ஜாஃப்னா கிங்ஸ் படைத்தது. ஆட்டநாயகன் விருதை அவிஷ்கா பெர்னாண்டோவும், தொடர் நாயகன் விருதை சதீரா சமரவிக்ரமாவும் பெற்றனர்.
Jaffna Kings are the Champions tonight for the 3rd consecutive time! ??#WinTogether #LPL2022 #LPLT20 pic.twitter.com/1otnaKxbrW
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) December 23, 2022