யாழ். நீளத்திக்காடு ஸ்ரீ பேச்சியம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவம்! விமர்சையாக இடம்பெற்ற வேட்டைத்திருவிழா (Photos)
யாழ். அராலி மேற்கு - நீளத்திக்காடு ஸ்ரீ பேச்சியம்பாள் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவமானது கடந்த (2023.06.20) அன்று ஆரம்பமான நிலையில் சிறப்பாக இடம்பெற்று வருகிறது.
அந்த வகையில் நேற்றையதினம் (27.06.2023) 7ஆம் திருவிழாவான வேட்டைத்திருவிழா வெகுவிமர்சையாக இடம்பெற்றுள்ளது.
இதன்போது அம்பாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளி வலம் வந்ததை தொடர்ந்து பேச்சியம்பாள் ஆலய வேட்டைத்திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றுள்ளது.
பூஜை வழிபாடு
இந்த பூஜை வழிபாடுகளை ஆலய பிரதம குருவான துஷ்யந்த குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் நடத்தியுள்ளனர்.
இந்த உற்சவத்தில் பல பகுதிகளில் இருந்தும் பெருமளவான பக்தர்கள் வருகை தந்து கலந்து கொண்டிருந்தனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |