இலங்கையில் கிணற்றில் கண்டுபிடிக்கப்பட்ட இளைஞரின் சடலம்: பொலிஸார் விசாரணை
இலங்கையின் யாழ் கோப்பாய் மத்தி பகுதியில் உள்ள தோட்டக் கிணறு ஒன்றில் இருந்து இளைஞரின் உடல் ஒன்று மீட்கப்பட்டு இருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிணற்றில் உயிரிழந்து கிடந்த இளைஞர் கோப்பாய் மத்தி பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய கதிர்காமநாதன் நிரோசன் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இளைஞர் கதிர்காமநாதன் நிரோசன் கடந்த 13ம் திகதி 4 மணியளவில் தன்னுடைய வீட்டில் இருந்து வெளியே சென்ற நிலையில், அதன் பிறகு காணாமல் போயுள்ளார்.
இதையடுத்து சம்பந்தப்பட்ட இளைஞர்களை அவரது உறவினர்கள் தீவிரமாக தேடி வந்துள்ளனர்.
இந்நிலையில் கோப்பாய் மத்தி பகுதியில் உள்ள தோட்டக் கிணறு ஒன்றில் இளைஞர் கதிர்காமநாதன் நிரோசன் சடலமாக மீட்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொலிஸாரின் மரண விசாரணைக்காக இளைஞரின் உடல் உடற்கூறு பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |