யூபர் சாரதியிடம் இருந்து காரை லாவகமாக திருடிய பெண்: கைது செய்த பொலிஸார்
அமெரிக்காவில் யூபர் கார் சாரதியிடம் இருந்து பெண் ஒருவர் காரை திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காரை திருடிய பெண்
அமெரிக்காவின் டெக்சாஸில் காரை மெதுவாக ஓட்டிச் சென்ற யூபர் சாரதியிடம் இருந்து காரை அலெக்ஸாண்ட்ரா என்ற பெண் திருடிச் சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.
யூபர் சாரதி காரை மெதுவாக இயக்குவதாக கூறி அவரை திசை திருப்பி இந்த திருட்டு சம்பவத்தை அந்த பெண் நடத்தியுள்ளார்.
Getty Images
உலகளவில் கூகுள் தேடலில் முதலிடம் பிடித்த மெஸ்ஸியின் இண்டர் மியாமி: இந்திய கிரிக்கெட் அணி பிடித்துள்ள இடம்?
மெதுவாக சென்று கொண்டு இருந்த காரில் இருந்து சாரதியின் செல்போனை அந்த பெண் வெளியே தூக்கி வீசியுள்ளார்.
அப்போது அதை அவர் எடுக்க சென்ற போது அலெக்ஸாண்ட்ரா அந்த காரை வேகமாக எடுத்துச் சென்றுள்ளார்.
அத்துடன் யூபர் சாரதியின் அனுமதியின்றி அவரது கிரெடிட் கார்டையும் அந்த பெண் பயன்படுத்தியுள்ளார்.
(Austin Police Department) 27-year-old Neusha Alexandra Afkami
இந்நிலையில் யூபர் சாரதியிடம் இருந்து காரை திருடிச் சென்ற பெண் அலெக்ஸாண்ட்ரா-வை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |