தப்பி வந்த 3 பிணைக் கைதிகள்: இஸ்ரேலிய வீரர்கள் எடுத்த தவறான முடிவின் விளைவு
3 பிணைக் கைதிகளை இஸ்ரேலிய ராணுவ வீரர்கள் தவறுதலாக சுட்டுக் கொன்று இருப்பதாக இஸ்ரேலிய பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.
3 பிணைக் கைதிகள்
உயிரிழப்பு வடக்கு காசா பகுதியில் தாக்குதலை முன்னெடுத்து வரும் இஸ்ரேலிய ராணுவ வீரர்கள் ஆபத்து என கருதி தவறுதலாக 3 பிணைக் கைதிகளை சுட்டுக் கொன்று இருப்பதாக இஸ்ரேலிய பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.
காசாவின் Shejaiya பகுதியில் நடைபெற்று கொண்டு இருந்த சண்டையின் போது படைகளை நோக்கி வந்ததால் ஆபத்து என கருதி இஸ்ரேலிய வீரர்கள் சுட்டதாக IDF செய்தி தொடர்பாளர் Daniel Hagari தெரிவித்துள்ளார்.
Hostages and Missing Families Forum
சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் உடல்கள் இஸ்ரேலிய பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டு பரிசோதித்த பிறகு தான் அவர்கள் இஸ்ரேலிய பிணைக் கைதிகள் என்பது உறுதிப்படுத்தப்பட்டது எனவும் தெரிவித்துள்ளார்.
பெயர் விவரங்கள்
பிணைக் கைதிகள் என அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டவர்களில் ஒருவர் பெயர் யோதம் ஹைம்(Yotam Haim), மற்றொருவரின் பெயர் சமர் தலால்கா(Samer Talalka), மூன்றாவது நபரின் பெயர் விவரத்தினை அவரது குடும்பத்தினர் வெளியிட விரும்பவில்லை.
Getty
இவர்கள் மூன்று பேரும் அக்டோபர் 7ம் திகதி ஹமாஸ் படையினரால் கடத்தப்பட்டுள்ளனர் என்றும், மூவரும் அவர்களது சிறைப்பிடிப்பாளர்களிடம் இருந்து தப்பித்து இருக்க வேண்டும் அல்லது அப்பகுதியில் நடைபெற்ற சண்டையின் போது வரும பின்தங்கி இருக்க வேண்டும் என்ற இஸ்ரேலிய பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Israel, Hamas, Israel hamas war, Gaza, hostage