முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் கட்சி அலுவலகம் இடிப்பு! தொண்டர்களின் எதிர்ப்பால் பரபரப்பு
ஆந்திர பிரதேசத்தில் முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் கட்சி அலுவலகம் இடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
தெலுங்கு தேசம் ஆட்சி
ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது.
சந்திரபாபு நாயுடு முதல்வராக பதவி ஏற்க, ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் துணை முதல்வராக பதவி ஏற்றார்.
இந்த நிலையில், குண்டூர் மாவட்டத்தில் கட்டப்பட்டு வந்த முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி அலுவலகம் இடிக்கப்பட்டுள்ளது.
பரபரப்பு
அப்போது அங்கு குவிந்த கட்சி தொண்டர்கள், முதல்வர் சந்திர பாபு நாயுடுவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு உண்டானது.
''சந்திரபாபு நாயுடு பழிவாங்கும் அரசியலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளார்'' என கட்சி அலுவலக இடிப்பு குறித்து ஜெகன்மோகன் ரெட்டி குற்றம்சாட்டியுள்ளார்.
முன்னதாக, ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை இடிக்க நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்து இருந்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |