Jaguar Type 00: பிரீமியம் மின்சார வாகன சந்தையில் புதிய புரட்சி
Jaguar Type 00 பிரீமியம் மின்சார கார் 2026-ல் வெளியாகவுள்ளது.
Jaguar நிறுவனம் தனது 90 ஆண்டுகளாக நிலைத்திருக்கும் பாரம்பரியத்தை மாற்றும் வகையில், அனைத்து பழைய மொடல்களின் உற்பத்தியை நிறுத்தி, 2026-ல் புதிய மின்சார செடான் மொடலை அறிமுகப்படுத்தவுள்ளது.
இந்த மொடல் Type 00 என அழைக்கப்படுகிறது. இது Jaguar வரலாற்றில் மிகச் சிறந்த, விலை உயர்ந்த மற்றும் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட மொடலாக இருக்கும்.
"இந்த மொடல் மிகக் குறைவாகவே தயாரிக்கப்படும். ஒரு Jaguar Type 00 வாகனத்தை நீங்கள் சாலையில் காணும்போது, அது ஒரு சிறப்பு தருணமாக இருக்கும்" என Jaguar USA தலைவர் Brandon Baldassari கூறியுள்ளார்.
எனவே இந்த மொடல் பெருமளவில் விற்பனை செய்யப்படாது. அதற்கு பதிலாக பிரீமியம் வாடிக்கையாளர்களை இலக்காக கொண்டிருக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Jaguar Type 00 EV launch 2026, Jaguar luxury electric sedan 2026, Jaguar ultra-rare EV Type 00, Jaguar rebrand electric future, Type 00 specs and design Jaguar, Jaguar EV concept to production, Jaguar premium electric car 2026