'ஜெய் ஸ்ரீ ராம்' சொல்வதில் என்ன பிரச்சனை? 1000 முறை கூட சொல்லலாம்: முகமது ஷமி ஓபன் டாக்
ஜெய் ஸ்ரீ ராம் என்றும் சொல்லலாம், அல்லாஹு அக்பர் என்றும் சொல்லலாம் என இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி பேசியுள்ளார்.
விமர்சனங்கள்
உலகக்கோப்பை தொடரின் போது காலில் ஏற்பட்ட காயத்தால் முகமது ஷமி விளையாட முடியாமல் உள்ளார். உலகக்கோப்பை தொடரில் இலங்கை அணிக்கு எதிரான போட்டியின் நமாஸ் செய்ததாக முகமது ஷமி மீது குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியதால் அகமதாபாத் மைதானத்தில் ரசிகர்கள் பலரும் முகமது ஷமியை நோக்கி ஜெய் ஸ்ரீ ராம் என்று கூறி கோஷம் எழுப்பினர்.
கடந்த சில ஆண்டுகளாக முகமது ஷமி மீது விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. ஆனால், அவருக்கு தோனி மற்றும் விராட் கோலி இருவரும் ஆதரவாக நின்றனர்.
முகமது ஷமி பேசியது
இந்நிலையில் இதுகுறித்து முகமது ஷமி பேசுகையில், "எல்லா மதங்களிலும் மாற்று மதத்தினரை விரும்பாத சிலர் இருப்பார்கள். அதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் கிடையாது.
ராமர் கோயில் கட்டப்படுகிறது என்றால் ஜெய் ஸ்ரீ ராம் என்று சொல்வதில் என்ன பிரச்சனை இருக்கிறது. 1000 முறை கூட ஜெய் ஸ்ரீ ராம் என்று சொல்லலாம்.
அதேபோல் எனக்கு அல்லாஹு அக்பர் என்று சொல்ல விரும்பினால் அதை 1000 முறை கூட சொல்வேன். இதில் என்ன வேறுபாடு உள்ளது" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |