அந்த காரணத்தால் உயிருக்கு அச்சுறுத்தல்... பிரித்தானியாவில் இருந்து நாடுகடத்தப்படுவதை எதிர்க்கும் தமிழர்
சிறார் துஸ்பிரயோக வழக்கில் சிக்கிய தமிழர் ஒருவர் நாடுகடத்தப்படுவதால் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என குறிப்பிட்டு, கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக பிரித்தானியாவிலேயே தங்கியுள்ளார்.
சமூகத்திற்கு ஆபத்தானவர்
நாடுகடத்தப்படுவது அவரது மனித உரிமைகளை மீறுவதாக இருந்தால் உடன்பட முடியாது என நீதிபதிகள் மறுத்துள்ளதும் ஒரு காரணமாக கூறப்படுகிறது.
மூன்று சிறார்களை துஸ்பிரயோகம் செய்த வழக்கில் கடந்த 2012ல் சிறை தண்டனைப் பெற்றுள்ள அந்த நபர், சமூகத்திற்கு ஆபத்தானவர் என்றும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.
அப்போதிருந்து அவர் பிரித்தானியாவில் தங்குவதற்காக நீண்ட காலமாக புகலிடம் கோரி போராடி வருகிறார். மட்டுமின்றி, தான் தன்பாலின ஈர்ப்பாளர் என்பதால் இலங்கைக்குத் திரும்பினால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றும் கூறி வருகிறார்.
மட்டுமின்றி, நாடு கடத்தப்படுவதன் மூலம் 50 வயதாகும் அந்த நபரின் மனித உரிமைகள் மீறப்படுமா என்று மூத்த நீதிபதிகள் விவாதிக்கும் அளவுக்கு, இந்த வழக்கு வெவ்வேறு நீதிமன்றங்களுக்கு இடையே முன்னெடுக்கப்பட்டது.
இலங்கையில் யாழ்ப்பாணத்தில் பிறந்த இந்த நபர் 2008 ஆம் ஆண்டு மாணவர் விசாவில் பிரித்தானியா வந்துள்ளார். லண்டனின் ரீடிங் கல்லூரியில் ஃபேஷன் டிசைன் மற்றும் மார்க்கெட்டிங் படிப்பில் மூன்றாண்டுகள் பயின்றுள்ளார்.
2011ல் சிறார் துஸ்பிரயோக வழக்கில் சிக்கி கைதாகியுள்ளார். 2012 பிப்ரவரி மாதம் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனைக்கும் விதிக்கப்பட்டுள்ளார். ஆனால், தண்டனைக்கு பிறகு நாடுகடத்தவும் உத்தரவாகியுள்ளது.
மேல்முறையீடு செய்ய
ஆனால் 2012ல் தாம் ஒரு தன்பால் ஈர்ப்பாளர் என குறிப்பிட்டு, நாடுகடத்துவதில் இருந்து விலக்கு கோரியதுடன் புகலிடம் கோரியுள்ளார். 2012 ஜூன் மாதம் குறித்த நபருக்கு சாதகமாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர் பிரித்தானியாவின் பல்வேறு நீதிமன்றங்களில் அவரை நாடு கடத்துவது சட்டபூர்வமானதா என்பது குறித்து நீதிபதிகள் மாறுபட்ட முடிவுகளை எட்டியுள்ளனர்.
2023 ல், நீதிபதி ஒருவர் குறித்த நபருக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்து, அவரை நாடு கடத்துவது அவரது மனித உரிமைகளை மீறும் செயல் என்று கூறினார். ஆனால் அந்த முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்விவகார அமைச்சகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது.
தற்போது இந்த வழக்கு தொடர்பில் மேல் தீர்ப்பாயத்தில் ஒரு புதிய விசாரணை நடைபெறும் என்றே தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |