பிரேசில் ஜனாதிபதி தேர்தலில் பின்னடைவை சந்தித்த போல்சார்னோ
போல்சார்னோ வெறும் 43.2 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார்
அமெரிக்காவை தொடர்ந்து பிரேசிலில் வலதுசாரி தலைவர் வீழ்ச்சி அடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
பிரேசிலில் தீவிர வலதுசாரியான ஜெய்ர் போல்சார்னோ தோல்வியை நோக்கி சென்றுள்ளார். தென் அமெரிக்க நாடான பிரேசிலில் ஜனாதிபதி தேர்தல் நடந்து முடிந்துள்ளது.
வலதுசாரி கட்சியை சேர்ந்த தற்போதைய ஜனாதிபதி ஜெய் போல்சார்னோவும், தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த லூலா சில்வாவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டனர்.
பிரேசிலில் இரண்டு கட்டமாக தேர்தல் நடக்கும். முதல் கட்டத்தில் 50 சதவிகித வாக்குகளை ஜனாதிபதி வேட்பாளர் பெற வேண்டும். அப்படி பெற்றால் அவர்தான் ஜனாதிபதி.
இந்த நிலையில் தேர்தலின் முதல் சுற்றில் சில்வா முன்னிலை பெற்றுள்ளார். எனினும் இரண்டாம் கட்ட தேர்தலில் சில்வா 48.4 சதவிகிதம் வாக்குகளை பெற்று முன்னிலை பெற்றுள்ளார். போல்சார்னோ வெறும் 43.2 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார்.
இதன் மூலம் மக்கள் மீண்டும் சில்வா ஜனாதிபதியாக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை இரண்டாம் கட்ட வாக்கெடுப்பு நடக்கும். இதில் மீண்டும் வாக்கெடுப்பு நடக்கும்.
Getty Images/file
அதில் சில்வா 51+ சதவிகித வாக்குகளை வென்று ஜனாதிபதி ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவை தொடர்ந்து பிரேசிலில் வலதுசாரி தலைவர் வீழ்ச்சி அடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.