ஐரோப்பா இந்தியாவிற்கு எதிராக ஆயுதங்களை விற்கிறது - ரஷ்ய எண்ணெய் விவகாரத்தில் ஜெய்சங்கர் பதிலடி
இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர், பின்லாந்து பயணத்தின்போது, ரஷ்ய எண்ணெய் வாங்குவதற்கான கேள்விக்கு கடுமையான பதிலடி அளித்துள்ளார்.
ஐரோப்பிய பத்திக்கையாளர் ஒருவர், "இந்தியா ரஷ்யாவிற்கு மிகவும் ஆதரவு அளிக்கிறது, எண்ணெயை வாங்குகிறது" என்று விமர்சித்தார்.
இதற்கு பதிலளித்த ஜெய்சங்கர், "நாங்கள் எண்ணையை செலவு மற்றும் கிடைக்கும் தன்மையின் அடிப்படையில் வாங்குகிறோம். அப்போது சந்தையில் அதிகமாக கிடைத்தது ரஷ்ய எண்ணெய்தான். ஐரோப்பியர்கள் மத்திய கிழக்கில் இருந்து வாங்கியதால், எங்கள் வழக்கமான சப்ளையர்கள் குறைந்தனர்" என்று விளக்கம் அளித்தார்.

மேலும், "ஐரோப்பா ஆயுதங்களை விற்கிறது, அவை இந்தியாவை தாக்க பயன்படுத்தப்படுகின்றன. அனால், எந்த இந்திய ஆயுதமும் ஐரோப்பாவைத் தாக்கவில்லை. இது பல ஆண்டுகளாக நடந்து வருகிறது" என்று அவர் வலியுறுத்தினார்.
தொடர்ந்து, அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாட்டையும் அவர் சுட்டிக்காட்டினார்.
2022-ஆம் ஆண்டு, உலகளாவிய எண்ணெய் சந்தையை நிலைப்படுத்த அமெரிக்கா நேரடியாக இந்தியாவிடம் ரஷ்ய எண்ணெயை வாங்குமாறு கேட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தியாவின் நிலப்பாடு, "நாங்கள் எங்கள் எரிசக்தி பாதுகாப்பை முன்னிலைப்படுத்துகிறோம். உலக அரசியல் அழுத்தங்களால் அல்ல, நியாமான விலைகளின் அடிப்படையில் தான் முடிவெடுக்கிறோம்" என்று அவர் தெரிவித்தார்.
இந்த கருத்துக்கள், இந்தியாவின் வெளிநாட்டு கொள்கையில் தன்னம்பிக்கையையும், மேற்கத்திய நாடுகளின் இரட்டை நிலைப்பட்டை எதிர்கோள்ளும் திறனையும் வெளிப்படுத்துகின்றன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |