உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி: ருத்துராஜ்-க்கு பதிலாக ஜெய்ஸ்வால் இந்திய அணியில் சேர்ப்பு
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் ருத்துராஜ் கெய்க்வாட்-க்கு பதிலாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்
2021 முதல் 2023 ஆண்டு வரை நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளின் அடிப்படையில் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதல் இரண்டு இடங்களை பிடித்த இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி விரைவில் நடத்தப்பட உள்ளது.
ஜூன் 7ம் திகதி இங்கிலாந்தின் லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் இந்த டெஸ்ட் போட்டி தொடங்க உள்ளது.
BCCI
இந்த போட்டிக்கான வீரர்கள் பட்டியலை இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய இரு அணிகளும் சமீபத்தில் வெளியிட்டு இருந்தது.
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பொறுத்தவரை சுப்மன் கில், புஜாரா, விராட் கோலி, ராகுல், அஸ்வின், பரத், ரஹானே, ஜடேஜா, அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். அத்துடன் கூடுதல் வீரராக ருத்துராஜ் கெய்க்வாட் இணைக்கப்பட்டு இருந்தார்.
KSCA
கெய்க்வாட்-க்கு பதிலாக யஷஸ்வி ஜெய்ஸ்வால்
இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான கூடுதல் வீரராக இருந்த ருத்துராஜ் கெய்க்வாட்-க்கு பதிலாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
வரும் ஜூன் 3 திகதி ருத்துராஜ் கெய்க்வாட்-க்கு திருமணம் நடைபெறவுள்ள நிலையில், இந்திய அணியில் இந்த அதிரடி மாற்றத்தை பிசிசிஐ அறிவித்துள்ளது.
யஷஸ்வி ஜெய்ஸ்வால் இந்த ஆண்டு ஐபிஎல்-லில் ராஜஸ்தான் அணிக்காக தொடக்க வீரராக களமிறங்கிய அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
AP