மைதானத்தில் சிக்ஸர் மழை! 5 ரன்னில் தவறிய 22 வயது வீரரின் முதல் சதம் (வீடியோ)
மெல்போர்ன் ரெனெகேட்ஸ் வீரர் ஜேக் பிரேசர் மெக்கர்க், 24 பந்துகளில் அரைசதம் விளாசினார்.
ஜேக் பிரேசர் மெக்கர்க் அதகளம்
டாக்லேண்ட்ஸ் மைதானத்தில் நடந்து வரும் பிக்பாஷ் லீக் போட்டியில் மெல்போர்ன் மற்றும் பிரிஸ்பேன் அணிகள் மோதுகின்றன.
முதலில் ஆடிய பிரிஸ்பேன் ஹீட் (Brisbane Heat) அணி 4 விக்கெட்டுக்கு 196 ஓட்டங்கள் குவித்தது. ஜேக் வுட் 27 பந்துகளில் 45 ஓட்டங்களும், அல்சோப் 26 பந்துகளில் 42 ஓட்டங்களும் விளாசினர்.
Jake Fraser-McGurk made his maiden BBL fifty against the Heat at Marvel Stadium.
— KFC Big Bash League (@BBL) January 18, 2025
Back against the same team at the same venue, could it be his day today? #BBL14 pic.twitter.com/ojHJlWDQum
பின்னர் மெல்போர்ன் அணியில் களமிறங்கிய இளம் வீரர் ஜேக் பிரேசர் மெக்கர்க் அதகளம் செய்தார். அடுத்தடுத்து சிக்ஸர்களை பறக்கவிட்டு வாணவேடிக்கை காட்டிய அவர், 24 பந்துகளில் அரைசதத்தை எட்டினார்.
தவறிய சதம்
அதன் பின்னரும் அதிரடி ஆட்டத்தில் மிரட்டிய ஜேக், விரைவாக சதத்தை நோக்கி பயணித்தார். ஆனால், 17வது ஓவரில் ஸ்ட்ரைட் திசையில் அவர் அடித்த ஷாட்டை ரென்ஷா மிரட்டலாக கேட்ச் செய்தார். இதனால் 5 ஓட்டங்களில் ஜேக் சதத்தை தவறவிட்டார்.
The ROOSTER 🐓
— KFC Big Bash League (@BBL) January 18, 2025
Jake Fraser-McGurk looks ON today! #BBL14 pic.twitter.com/GQ91Zlp4Zb
மொத்தம் 46 பந்துகளை எதிர்கொண்ட அவர் 8 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 95 ஓட்டங்கள் குவித்தார்.
JFM!
— KFC Big Bash League (@BBL) January 18, 2025
This is crazy hitting. #BBL14 pic.twitter.com/IstdkNTbgz
அதனைத் தொடர்ந்து, ஸ்பென்சர் ஜான்சன் ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளை கைப்பற்ற ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.
அணித்தலைவர் சதர்லாண்ட் பவுண்டரிகளை விரட்ட, 18வது ஓவரில் பெர்குஸ் ஓ நீல் 1 சிக்ஸர், 1 பவுண்டரி அடித்து அணியை வெற்றி பெற வைத்தார்.
JFM’s highest BBL score 👏
— KFC Big Bash League (@BBL) January 18, 2025
That was some knock from Jake Fraser-McGurk! #BBL14 pic.twitter.com/4uS4V2ARcf
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |