இலங்கைக்கு எதிராக முதல் சதத்தை பூர்த்தி செய்த ஜேமி ஸ்மித்! இங்கிலாந்து 122 ஓட்டங்கள் முன்னிலை
இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர் ஜேமி ஸ்மித் இலங்கை அணிக்கு எதிராக முதல் சதத்தை பதிவு செய்துள்ளார்.
இங்கிலாந்து vs இலங்கை முதல் டெஸ்ட்
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
Milan Rathnayake announces himself on the Test stage with a brilliant maiden fifty (72)! What a start to his career. #ENGvSL pic.twitter.com/w0h1pIFWQ7
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) August 21, 2024
அதன்படி முதல் இன்னிங்ஸ் முடிவில் இலங்கை அணி 74 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 236 ஓட்டங்கள் குவித்து இங்கிலாந்து அணிக்கு முன்னிலையை நிர்ணியித்து இருந்தது.
இதையடுத்து முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 85.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 358 ஓட்டங்கள் குவித்து இலங்கை அணிக்கு 122 ஓட்டங்கள் முன்னிலையை நிர்ணயித்தது.
Having fun in the middle in Manchester! ?
— England Cricket (@englandcricket) August 23, 2024
Which is your favourite four? ?
In the Market for Four | @IGcom pic.twitter.com/OQpGaXqq81
இந்நிலையில் 3ம் நாளான இன்று இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வரும் இலங்கை அணி 4.1 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 17 ஓட்டங்கள் குவித்து விளையாடி வருகிறது.
இலங்கை அணிக்கு இன்னும் 105 ஒட்டங்கள் முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
முதல் சதம்
இங்கிலாந்து அணிக்காக முதல் இன்னிங்ஸில் விளையாடிய விக்கெட் கீப்பர் ஜேமி ஸ்மித் (Jamie Smith) மூன்றாம் நாளான இன்று இலங்கை அணிக்கு எதிராக முதல் சதத்தை பூர்த்தி செய்துள்ளார்.
MAIDEN TEST ?!
— England Cricket (@englandcricket) August 23, 2024
A dream come true ?
Live clips: https://t.co/WlpxJWmDmV
??????? #ENGvSL ?? | #EnglandCricket pic.twitter.com/JuC6WRV3Dj
மொத்தம் 148 பந்துகளை எதிர்கொண்ட ஜேமி ஸ்மித் 8 பவுண்டரிகள் 1 சிக்சர்கள் விளாசி 111 ஓட்டங்கள் குவித்துள்ளார்.
இறுதியில் முதல் இன்னிங்ஸின் 79.4 ஓவரில் பிரபாத் ஜெயசூர்யா வீசிய பந்தில் சண்டிமாலிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |