புடின் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! குர்ஸ்க் பகுதிக்கு விரையும் ஐ.நா அணுசக்தி குழு
குர்ஸ்க் பகுதியில் உள்ள அணுமின் நிலையம் மீது உக்ரைன் தாக்குதல் நடத்த முயற்சித்து இருப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
உக்ரைன் தாக்குதல்
உக்ரைன் ராணுவம் கடந்த 2 வாரங்களாக ரஷ்யாவின் எல்லைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி-யின் தகவல்படி, இதுவரை 92 ரஷ்ய குடியேற்றங்களை உக்ரைனிய படைகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து இருப்பதாகவும், குர்ஸ்க் பகுதியை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான சண்டை நடைபெற்று வருவதாகவும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் உக்ரைனிய படைகள் குர்ஸ்க் அணுமின் நிலையத்தின் மீது இரவு நேரத்தில் தாக்குதல் நடத்த முயற்சித்ததாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் குற்றம் சுமத்தியுள்ளார்.
புடின் குற்றச்சாட்டு
வியாழக்கிழமை தொலைக்காட்சிக்கு அதிகாரப்பூர்வமாக அளித்த பேட்டியின் போது இது தொடர்பாக பேசிய ரஷ்ய ஜனாதிபதி புடின், குர்ஸ்க் அணுமின் நிலையத்தின் மீது உக்ரைனிய வீரர்கள் தாக்குதல் நடத்தியது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச அணுசக்தி நிறுவனத்திடம் (IAEA) தெரியப்படுத்தி இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இருப்பினும் குற்றச்சாட்டு மற்றும் புகார் குறித்த எந்தவொரு ஆதார ஆவணங்களையும் புடின் வெளியிடவில்லை.
Ukrainian militants attempted to strike the Kursk Nuclear Power Plant last night, the IAEA has been informed, President Putin said pic.twitter.com/jVEDHru0C7
— sonja van den ende (@SonjaEnde) August 22, 2024
ஆனால், ரஷ்யாவின் புகாரை தொடர்ந்து குர்ஸ்க் பகுதிக்கு சர்வதேச அணுசக்தி நிறுவன அதிகாரிகள் (IAEA) விரைந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யாவின் இந்த குற்றச்சாட்டுக்கு உக்ரைன் எந்தவொரு பதிலும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |