உக்ரைன் சுதந்திர தினம்... ரஷ்யாவின் பயங்கரமான திட்டம் குறித்து எச்சரித்த அமெரிக்கா
உக்ரைனின் சுதந்திர தினத்தன்று நாடு முழுவதும் பயங்கரத் தாக்குதல்களை முன்னெடுக்க ரஷ்யா தயாராகி வருவதாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்க தூதரகம்
உக்ரைன் மக்கள் வரும் சனிக்கிழமை தங்களின் 33வது சுதந்திர தினத்தை கொண்டாட இருக்கிறார்கள். அதற்கான தாயாரிப்புகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், உக்ரைன் தலைநகரில் செயல்பட்டுவரும் அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுதந்திர தினத்தன்று நாடு முழுவதும் பயங்கரமான ட்ரோன் தாக்குதலை முன்னெடுக்க ரஷ்யா தயாராகி வருவதாக அந்த எச்சரிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த 2022 பிப்ரவரி மாத உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததன் பின்னர் இதுவரை 9,600 ஏவுகணைகள் மற்றும் 14,000 ட்ரோன்களை ஏவியுள்ளதாக உக்ரைனின் மூத்த தளபதி Oleksandr Syrskyi தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் அமெரிக்க தூதரகம் தங்களுக்கு கிடைத்துள்ள தகவலின் அடிப்படையில், உக்ரைன் நிர்வாகத்தை எச்சரித்துள்ளது. அடுத்த பல நாட்கள் மற்றும் வாரத்தின் இறுதி நாட்கள் ரஷ்ய அச்சுறுத்தல் அதிகமாக இருக்கும் என்றும் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களை அதிகமாக எதிர்பார்க்கலாம் என்றும் தூதர அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
பலரிடையே தேசபக்தி
புதன்கிழமை மதியத்திற்கு மேல் குறித்த தகவலை தங்கள் இணைய பக்கத்திலும் அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ளது. உக்ரைன் மக்களை பொறுத்தமட்டில் ரஷ்யாவின் படையெடுப்புக்குப் பிறகு சுதந்திர தினம் என்பது அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது.
மட்டுமின்றி, பலரிடையே தேசபக்தியை தூண்டியுள்ளது. மேலும், இந்த ஆண்டு உக்ரைன் சுதந்திர தினம் என்பது ரஷ்யா மீது எதிர்பாராத ஊடுருவலை முன்னெடுத்து, விளாடிமிர் புடினின் பலம் வாய்ந்த படைகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதன் பின்னர் உக்ரைன் மக்கள் கொண்டாட உள்ளனர்.
இதனிடையே, ரஷ்யா மீதான ஊடுருவலுக்கு மறக்க முடியாத பதிலை தங்கள் நாடு அளிக்கும் என்றே விளாடிமிர் புடின் தெரிவித்திருந்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |