பிரபல திரைப்பட இயக்குனர் ஜனநாதன் உடல்நிலை! நடிகை ஸ்ருதிஹாசன் மெளனம்
பிரபல திரைப்பட இயக்குனரான ஜனாநாதன் உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் நிலையில், அவரைப் பற்றிய நிலை நடிகை ஸ்ருதிஹாசனுக்கு தெரியாதா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இயற்கை படம் மூலம் பிரபலமான இயக்குனர் ஜனநாதன், தற்போது சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார்.
இதனால் இவர் விரைவில் குணம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என்று திரைப்பிரபலங்கள் உட்பட ரசிகர்கள் பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், இவருடைய லாபம் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள ஸ்ருதிஹாசன் இதுவரை சமூக வலைத்தளத்தில் அவரைப் பற்றி எந்த ஒரு பிரார்த்தனைப் பதிவையும் பதிவிடாதது ஆச்சரியமாக உள்ளது.
ஏனெனில், லாபம் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் தன்னிடம் சொல்லாமல் கொள்ளாமல் ஸ்ருதிஹாசன் வெளியேறிவிட்டதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் ஜனநாதன் வருத்தமுடன் கூறியிருந்தார்.
இதனால் அதை மனதில் வைத்துக் கொண்டு ஸ்ருதிஹாசன் எந்தவிதமான ஆறுதல் பிரார்த்தனைப் பதிவையும் ஜனநாதனுக்காக ஸ்ருதி பதிவிடாமல் இருக்கிறார் என்று ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்,