சீட்டுக்கட்டுபோல் சரிந்த இங்கிலாந்தின் விக்கெட்டுகள்! அணியை மீட்கப் போராடும் பட்லர்
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாறி வருகிறது.
ஜென்சன் தாக்குதல் பந்துவீச்சு
கராச்சியில் இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டி நடந்து வருகிறது.
நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. அதன்படி களமிறங்கிய தொடக்க வீரரான பிலிப் சால்ட் 8 ஓட்டங்களில் ஜென்சன் ஓவரில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த ஜேமி ஸ்மித்தும் டக்அவுட் ஆக, 24 ஓட்டங்கள் எடுத்திருந்த டக்கெட்டையும் வேகப்பந்து வீச்சாளர் ஜென்சன் வெளியேற்றினார்.
போராடும் பட்லர்
அதன் பின்னர் களமிறங்கிய ஹாரி புரூக் 19 ஓட்டங்களில் மஹாராஜ் ஓவரில் அவுட் ஆனார். ஓரளவு ஓட்டங்களை எடுத்த ஜோ ரூட் (37) தனது விக்கெட்டை முல்டரிடம் இழந்தார்.
லிவிங்ஸ்டன் 9 ஓட்டங்களிலும், ஓவர்டன் 11 ஓட்டங்களிலும் நடையைக் கட்ட பட்லர் அணியை மீட்க போராடி வருகிறார்.
இங்கிலாந்து அணி 28 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 140 ஓட்டங்கள் எடுத்துள்ளது. ஜென்சன் 3 விக்கெட்டுகளையும், மஹாராஜ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |