மூன்றாவது பூஸ்டர் தடுப்பூசியை அங்கீகரித்த ஐரோப்பிய ஒன்றியம்!
ஜான்சன் & ஜான்சன் கோவிட் தடுப்பூசியை பூஸ்டர் தடுப்பூசியாக பயன்படுத்தப்படலாம் என ஐரோப்பிய மருந்துகள் நிறுவனம் அறிவித்துள்ளது.
18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் முதல் டோஸ் பெற்ற இரண்டு மாதங்களுக்குப் பிறகு, ஜான்சன் & ஜான்சனின் Janssen கோவிட் தடுப்பூசியை பூஸ்டர் டோஸாக பரிசீலிக்கப்படலாம் என்று EMA-வின் மனித மருந்துகள் குழு (CHMP) முடிவு செய்துள்ளது.
ஜான்சன் & ஜான்சனின் தடுப்பூசி மட்டுமல்ல, மற்ற mRNA தடுப்பூசிகளைப் போட்டவர்களும் Janssen தடுப்பூசியை பூஸ்டர் ஷாட்டாகப் பயன்படுத்தலாம் என்று ஐரோப்பிய மருந்துகள் நிறுவனம் இன்று (புதன்கிழமை) அறிவித்தது.
ஃபைசர்/பயோஎன்டெக் மற்றும் மாடர்னாவுக்குப் பிறகு, EMA பெரியவர்களுக்கான பூஸ்டர் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்துள்ள மூன்றாவது தடுப்பூசி இதுவாகும்.
புதிய அலைகளுடன் போராடும் பல ஐரோப்பிய நாடுகள் உட்பட, உலகளவில் கோவிட் வழக்குகள் மீண்டும் அதிகரித்து வருவதால், சில அரசாங்கங்கள் குடிமக்களை பூஸ்டர் ஷாட்களைப் பெற வலியுறுத்துகின்றன.
கடந்த மாதம் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட மிகவும் பிறழ்ந்த (highly-mutated) Omicron மாறுபாட்டிற்கு எதிராக மக்களைப் பாதுகாக்க பூஸ்டர் ஷாட்கள் பயன்படுத்தவேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
EMA இதுவரை ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள பெரியவர்களுக்கு நான்கு தடுப்பூசிகளை அங்கீகரித்துள்ளது: ஃபைசர்/பயோஎன்டெக் மற்றும் மாடர்னாவின் மெசஞ்சர் ஆர்என்ஏ தடுப்பூசிகள், அஸ்ட்ராஜெனெகா மற்றும் ஜான்சன் & ஜான்சன் ஆகியவற்றின் வைரஸ் வெக்டர் தடுப்பூசிகள் ஆகும்.