ஜந்தர் மந்தர் மாணவர்கள் போராட்டம்: டெல்லியில் மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்
டெல்லியில் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், 16 முக்கிய மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளது.
டெல்லி மாணவர்கள் போராட்டம்
நீட் தேர்வில் நடந்த கேள்வித்தாள் கசிவு தொடர்பான மாணவர்கள் போராட்டம் டெல்லியில் தீவிரமடைந்து வரும் நிலையில் பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு டெல்லியில் ராஜீவ் சவுக் முதல் மத்திய செயலகம் வரை உள்ள 16 மெட்ரோ நிலையங்கள் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜந்தர் மந்தர் பகுதியில் காக்ரோச் ஜனதா கட்சி(CJP) முன்னெடுத்து வரும் இந்த போராட்டத்தை தொடர்ந்து புதன்கிழமை காலை டெல்லி மெட்ரோ ரயில் கழகம் இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.

மேலும் மறு உத்தரவு வரும் வரை இந்த தற்காலிக தடை நடைமுறையில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மூடப்பட்ட மெட்ரோ ரயில் நிலையங்கள்
ராஜீவ் சவுக், மத்திய செயலகம், மண்டி ஹவுஸ், ஐ.டி.ஓ, கார் மார்க்கெட், லேக் கல்யாண் மார்க், படேல் சவுக், ராமகிருஷ்ணா ஆசிரமம் மார்க், பரகம்பா சாலை, உச்சநீதிமன்றம், சேவா தீர்த், ஜன்பத், டெல்லி கேட், இந்திரபிரஸ்தா, ஜோர் பாக், சிவாஜி ஸ்டேடியம் ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Service Update
— Delhi Metro Rail Corporation (@OfficialDMRC) July 22, 2026
Below mentioned Metro stations have been closed till further instructions. However, Interchange facility shall remain available at Rajiv Chowk, Mandi House and Central Secretariat.
1. Lok Kalyan Marg
2. Rajiv Chowk
3. Patel Chowk
4. Ramakrishna Ashram Marg
5.…
மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டாலும், ராஜீவ் சவுக், மண்டி ஹவுஸ் மற்றும் மத்திய செயலகம் ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்களில் வழக்கமாக பயணிகள் ரயில் மாறும் வசதி செயல்பாட்டில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |