ஒரு வாரத்துக்கான அத்தியாவசிய பொருட்களை சேமித்து வைத்துக்கொள்ளவும்: ஜப்பான் மக்களுக்கு அறிவுறுத்தல்

Tsunami Japan
By Balamanuvelan Apr 21, 2026 05:13 AM GMT
Report

ஜப்பானை நேற்று மாலை பெரிய அளவிலான நிலநடுக்கம் ஒன்று தாக்கிய விடயம், மக்களுடைய அன்றாட வாழ்வுக்கு இடையூறை ஏற்படுத்தியுள்ளது.

ஜப்பானை தாக்கிய நிலநடுக்கம்

நேற்று, அதாவது, ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி, உள்ளூர் நேரப்படி 4.53 மணியளவில், ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக பதிவான நிலநடுக்கம் ஒன்று தாக்கியது.

முதலில், 7.4 என்றும், பிறகு 7.5 என்றும் கூறப்பட்ட நிலையில், தற்போது, ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக நிலநடுக்கம் பதிவானதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

ஒரு வாரத்துக்கான அத்தியாவசிய பொருட்களை சேமித்து வைத்துக்கொள்ளவும்: ஜப்பான் மக்களுக்கு அறிவுறுத்தல் | Japan Advise To Stock Emergency Kit Earthquake

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, Kuji என்னுமிடத்திலுள்ள துறைமுகம் ஒன்றை சிறிய அளவிலான, அதாவது, 80 சென்றிமீற்றர் உயரமுடைய சுனாமி ஒன்று தாக்கியுள்ளது.

இந்நிலையில், மேலும் பெரிய அளவில், அதாவது, 10 அடி உயரம் வரையுள்ள சுனாமி அலைகள் தாக்கலாம் என வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்திருந்தது.

ஆனால், நல்ல வேளையாக இதுவரை அப்படி எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை. 

சுனாமி எச்சரிக்கையைத் தொடர்ந்து... மிகப்பெரிய இரண்டாவது நிலநடுக்க பீதியில் ஜப்பான்

சுனாமி எச்சரிக்கையைத் தொடர்ந்து... மிகப்பெரிய இரண்டாவது நிலநடுக்க பீதியில் ஜப்பான்

அத்துடன், நிலநடுக்கத்தின்போது, ஒரே ஒரு முதியவர் மட்டும் படிக்கட்டுகளில் இறங்கும்போது கீழே விழுந்ததில் அவருக்கு அடிபட்டுள்ளது. வேறு யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.

அத்தியாவசிய பொருட்களை சேமித்துவைத்துக்கொள்ள அறிவுறுத்தல்

ஜப்பானில் 2011ஆம் ஆண்டு நிகழ்ந்த பாரிய நிலநடுக்கம் ஒன்றும், அதைத் தொடர்ந்த சுனாமியும் நாட்டையே தலைகீழாக புரட்டிப்போட்டன.

அந்த பயங்கர நிகழ்வுக்கு சரியாக 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் அரசும் மக்களும் பரபரப்பானதில் ஆச்சரியமில்லை. ஆகவே, 171,957 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டிருந்தது. 

அத்துடன், தொடர்ந்து மேலும் நிலநடுக்கங்கள் ஏற்படலாம் என்பதால், ஜப்பான் பிரதமரான Sanae Takaichi நாட்டு மக்களுக்கு அறிவிப்பொன்றை வெளியிட்டிருந்தார். 

ஒரு வாரத்துக்கான அத்தியாவசிய பொருட்களை சேமித்து வைத்துக்கொள்ளவும்: ஜப்பான் மக்களுக்கு அறிவுறுத்தல் | Japan Advise To Stock Emergency Kit Earthquake

அதில், நிலநடுக்கத்தைத் தொடர்ந்து மேலும் நிலநடுக்கங்கள் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், அடுத்த ஒரு வாரத்துக்கு உடனடியாக வெளியேற்றப்பட தயாராக இருக்குமாறும், அத்தியாவசிய பொருட்களை தயாராக வைத்துக்கொள்ளுமாறும் அவர் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

இன்னொரு முக்கிய விடயம் என்னவென்றால், நிலநடுக்கம் நிகழ்ந்த அதே நாளில் பிரித்தானிய வெளியுறவுச் செயலரான Yvette Cooper ஜப்பானில் இருந்துள்ளார். 

ஒரு வாரத்துக்கான அத்தியாவசிய பொருட்களை சேமித்து வைத்துக்கொள்ளவும்: ஜப்பான் மக்களுக்கு அறிவுறுத்தல் | Japan Advise To Stock Emergency Kit Earthquake

அவரும், ஜப்பான் வெளியுறவு அமைச்சரான Toshimitsu Motegiயும், டோக்கியோவில் இருதரப்பு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளார்கள் என்பதும், நிலநடுக்கத்தால் பிரித்தானிய வெளியுறவுச் செயலரின் பயணத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அரியாலை, Ilbesheim bei Landau, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, சென்னை, India, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கனகாம்பிகைக்குளம்

02 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
மரண அறிவித்தல்

முள்ளியவளை, Soest, Germany

01 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு

03 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US