இந்த நாட்டில் இலவச விமான பயணம் செய்யலாம் - என்ன காரணம்?
ஆசிய நாடு ஒன்றில், சுற்றுலா பயணிகள் இலவசமாக பயணம் செய்யலாம்.
இலவச விமான பயணம்
பொதுவாக விமான பயணம் என்றாலே, மற்ற வகையான ரயில் மற்றும் பேருந்து பயணங்களை விட பல மடங்கு அதிக கட்டணம் இருக்கும்.
கிழக்கு ஆசிய நாடான ஜப்பானுக்கு சுற்றுலா வரும் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. 2024 ஆம் ஆண்டில் மட்டும், 36.9 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளார். இது முந்தைய ஆண்டை விட 47.1% அதிகம் ஆகும்.
ஆனால், வரும் பயணிகளில் பெரும்பான்மையானவர்கள் டோக்கியோ, கியோட்டோ மற்றும் ஒசாகா ஆகிய உலகளவில் ஈர்க்கக்கூடிய நகரங்களுக்கு மட்டும் செல்வதால் அங்கு பெரும் நெருக்கடி ஏற்படுகிறது.
இதனை சரிக்கட்டும் வகையில், ஜப்பானின் மற்ற பகுதிகளுக்கும் சுற்றுலா பயணிகள் பரவலாக செல்லும் திட்டம் ஒன்றை ஜப்பான் ஏர்லைன்ஸ்(JAL) அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன்படி, நாட்டில் உள்ள 64 இடங்களில் ஒன்றுக்கு, ஒரு வழி இலவச விமான பயணத்தை ஜப்பான் ஏர்லைன்ஸ் வழங்குகிறது.
யாருக்கெல்லாம் இலவசம்?
ஜப்பானுக்கு வரும் வெளிநாட்டினர், ஜப்பான் ஏர்லைன்ஸில் இருவழி பயணத்திற்கு முன்பதிவு செய்திருந்து, 64 பகுதிகளில் ஒன்றுக்கு ஒருவழிபயணம் முன்பதிவு செய்திருந்தால் இந்த சலுகை பொருந்தும்.
இதில், ஒசாகா போன்ற பிரபலமான நகரங்கள், வடக்கில் உள்ள சப்போரோ, பெப்புவின் வெந்நீர் ஊற்றுகள், பண்டைய காடுகளுக்குப் பெயர் பெற்ற யாகுஷிமா தீவு உள்ளிட்டவையும் அடங்கும்.
இந்த சலுகை, இந்தியா, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், வியட்நாம் மற்றும் சீனா உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கும் கிடைக்கும்.
அமெரிக்கா, கனடா, மெக்சிகோ மற்றும் சீனாவிலிருந்து வரும் பயணிகள் டோக்கியோவில் ஒரு நாளுக்கு மேல் செலவழித்து, பின்னர் விமானத்தில் புறப்பட்டால், அவர்களிடம் ஒரு சிறிய நிறுத்தக் கட்டணம் வசூலிக்கப்படலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |