ஜப்பானின் அந்த லட்சியம் கட்டுப்படுத்தப்பட வேண்டும்... வட கொரியா ஆத்திரம்
அணு ஆயுதங்களை வைத்திருப்பதற்கான ஜப்பானின் லட்சியம் முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்று வட கொரியா கூறியுள்ளது.
தனது நோக்கம்
இந்த விவகாரம் தொடர்பில் வட கொரியாவின் வெளிவிவகாரக் கொள்கை அதிகாரிகள் தரப்பு தெரிவிக்கையில்,

மூன்று அணுசக்தி அல்லாத கொள்கைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறுவதன் மூலம், ஜப்பான் அணு ஆயுதங்களை வைத்திருப்பதற்கான தனது நோக்கத்தை வெளிப்படையாகக் காட்டுகிறது என குறிப்பிட்டுள்ளனர்.
அமெரிக்கா தென் கொரியாவின் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் கட்டும் கோரிக்கைக்கு ஒப்புதல் அளித்த நிலையிலேயே, ஜப்பான் இது போன்ற கருத்துக்களை தீவிரமாகத் தெரிவிக்கத் தொடங்கியது என்றும் வட கொரிய செய்து ஊடகம் தெரிவித்துள்ளது.

தென் கொரிய ஜனாதிபதி லீ ஜே மியங்குடன் வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்த உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தென் கொரியாவிற்கு சென்ற நிலையில்,
அக்டோபர் மாதம் தென் கொரியா ஒரு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலைக் கட்டுவதற்குத் தான் ஒப்புதல் அளித்திருப்பதாகக் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |