அவசரமாக நாடு முழுவதும் 200 ராணுவ விமானங்களை ஆய்வு செய்யும் ஜப்பான்: என்ன காரணம்?
ஜப்பானில் டி-4 இராணுவ பயிற்சி விமானம் விபத்திற்குள்ளானதால், நாடு முழுவதும் உள்ள சுமார் 200 இராணுவ பயிற்சி விமானங்களையும் ஆய்வு செய்யும் பணி தொடங்கியுள்ளது.
டி-4 இராணுவ பயிற்சி விமானம்
Komakiயில் உள்ள விமானப்படை தளத்தில் இருந்து டி-4 என்ற இராணுவ பயிற்சி விமானம் புறப்பட்டது.
ஆனால், சுமார் 4000 அடி உயரத்தில் விமானம் பறந்தபோது கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை அந்த விமானம் இழந்தது.
அதன் பின்னர் Iruka குளம் எனப்படும் நீர்த்தேக்கத்திற்கு அருகில் உள்ள பகுதியில் விமானம் காணாமல் போனதாகவும், அதன் பணியாளர்களையும், அதிகாரிகளையும் தேடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
விமானப்படைத் தலைவர்
இதனையடுத்து குறித்த பயிற்சி விமானம் விபத்திற்குள்ளானது தெரிய வந்தது. அதன் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் நகடானி தெரிவித்தார்.
அனுபவம் வாய்ந்த கேப்டன்தான் டி-4 விமானத்தை இயக்கியுள்ளார். ஆனாலும் புறப்பட்ட இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு ரேடாரில் இருந்து தொலைந்துபோனதாக விமானப்படை கூறியுள்ளது.
இதன் காரணமாக, விபத்திற்கான காரணத்தை கண்டுபிடித்து, நாடு முழுவதும் உள்ள கிட்டத்தட்ட 200 டி-4 இராணுவ பயிற்சி விமானங்களை ஆய்வு செய்த பின்னர்தான் பயிற்சி மேற்கொள்ளப்படும் என விமானப்படைத் தலைவர் Hiroaki Uchikura தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |