அவர் தீர்க்கதரிசி அல்ல... நம்ப வேண்டாம்: 1,000 நில அதிர்வுகளை எதிர்கொண்ட தீவு நாடு அறிவிப்பு
ஜப்பானின் பிரதான தீவுகளின் தென்மேற்கே மேலும் வலுவான நிலநடுக்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஜப்பான் அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பொதுமக்கள் அச்சத்தில்
ஆனால் ஒரு பெரிய பேரழிவு ஏற்படும் என்ற ஆதாரமற்ற கணிப்புகளை நம்ப வேண்டாம் என்றும் ஜப்பான் நிர்வாகம் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.
தெற்குப் பகுதியில் உள்ள பிரதான தீவான கியூஷுவில் 5.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவான மையப்பகுதிக்கு அருகிலுள்ள தொலைதூர தீவுகளிலிருந்து அதிகாரிகள் வெள்ளிக்கிழமை சில குடியிருப்பாளர்களை வெளியேற்றினர்.
அந்த நிலநடுக்கம் அதிகாரிகள் மற்றும் பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியது. மட்டுமின்றி கடந்த இரண்டு வாரங்களில் ககோஷிமா மாகாண தீவுகளில் பதிவான 1,000க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்களில் இதுவும் ஒன்று.
ஜூலை மாதம் முதல் வாரத்தில் நாட்டிற்கு ஒரு பெரிய பேரழிவு ஏற்படும் என்ற காமிக் புத்தகக் கணிப்பிலிருந்து உருவான வதந்திகளுக்கு இந்த தொடர் நில அதிர்வுகள் மற்றும் நிலநடுக்கங்கள் காரணமாக அமைந்தது.
இந்த நிலையில், ஜப்பான் வானிலை ஆய்வு மையத்தின் நிலநடுக்கம் மற்றும் சுனாமி கண்காணிப்புப் பிரிவின் இயக்குநரான Ayataka Ebita தெரிவிக்கையில், நமது தற்போதைய அறிவியல் அறிவைக் கொண்டு, நிலநடுக்கத்தின் சரியான நேரம், இடம் அல்லது அளவைக் கணிப்பது கடினம் என்றார்.
சனிக்கிழமை மீண்டும் 5.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ள நிலையிலேயே அவர் அந்த கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். அத்துடன், அறிவியல் ஆதாரத்துடன் மக்கள் புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
அவர் ஒன்றும் தீர்க்கதரிசி அல்ல
காமிக் புத்தகம் ஒன்றில் சனிக்கிழமை ஜப்பானில் மிகப்பெரிய பேரிடர் ஏற்படப் போவதாக பதிவாகியுள்ளது. கடந்த இரண்டு வாரங்களில் 1000 நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ள நிலையில் மக்கள், தூக்கத்தை மொத்தமாக தொலைத்துள்ளனர்.
மட்டுமின்றி, வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளும் ஜப்பானை தவிர்த்துள்ளனர். ஹொங்ஹொங் மக்களிடையே இந்த வதந்தி தீயாக பரவியுள்ளதை அடுத்து, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 11 சதவீத பயணிகளின் வருகை சரிவடைந்துள்ளது.
ஏப்ரல் மாதம் மட்டும் 3.9 மில்லியன் மக்கள் ஜப்பான் நோக்கி படையெடுத்துள்ளனர். இந்த நிலையிலேயே Ryo Tatsuki என்ற காமிக் புத்தகக் கலைஞரின் The Future I Saw என்ற 1999ல் வெளியான நூலில் சுனாமி மற்றும் மிக மோசமான நிலநடுக்கம் குறித்த பதிவு தீயாக பரவியது.
தொடர்புடைய புத்தகம் 2021ல் மீண்டும் வெளியிடப்பட்டது. ஆனால் அவர் ஒன்றும் தீர்க்கதரிசி அல்ல என அவரது காமிக் நூல் வெளியீட்டாளரால் அறிக்கை ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |