தினமும் 2 மணி நேரம் மட்டுமே செல்போன் பயன்படுத்த அரசு உத்தரவு - எங்கே தெரியுமா?
இன்றைய டிஜிட்டல் யுகத்தில் செல்போன் இல்லாத மனிதர்களை காண்பது அரிதாக உள்ளது.
மற்றவர்களுடன் தொடர்பு கொள்வது, பணப்பரிவர்த்தனை மேற்கொள்வது என செல்போன் அத்தியாவசிய ஒன்றாக மாறி உள்ளது. தூங்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் பெரும்பாலானோர் செல்போனில் மூழ்கியுள்ளனர்.
குழந்தைகள் மற்றும் சிறுவர்களிடமும் அதிகரித்து வரும் செல்போன் பயன்பாடு பல்வேறு உடல் மற்றும் மனநல பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
2 மணி நேரம் மட்டும் செல்போன்
இந்நிலையில், ஜப்பானில் உள்ள ஐச்சி(Aichi) மாகாணத்தில் 69,000 பேர் வசித்து வரும் டொயோகே(Toyoake) நகரம் செல்போன் பயன்படுத்துவதற்கு நேரக்கட்டுப்பாட்டை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன்படி, பள்ளி மற்றும் வேலை நேரம் தவிர்த்து நாள் ஒன்றுக்கு தினமும் 2 மணி நேரம் மட்டுமே செல்போன் பயன்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளது.
டொயோகே நகர சபையில் இந்த அவசர சட்டம் குறித்த விவாதம் தொடங்கியுள்ளது. இந்த வரைவு நிறைவேற்றப்பட்டால், அக்டோபரில் இந்த சட்டம் அமுலுக்கு வரும்.
இந்த சட்டம் தனிமனித சுதந்திரத்தின் மீதான தாக்குதல், வெறும் 2 மணி நேர பயன்பாடு சாத்தியமற்றது என பலரும் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |