நாட்டுக்குள் கடத்தல்காரர் ஒருவர் வருவதாக கிடைத்த தகவல்: சுங்க அதிகாரிகள் கண்ட காட்சி
ஜப்பானுக்குள் நுழையும் கடத்தல்காரர் ஒருவர் குறித்து சுங்க அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
மெக்சிகோ நாட்டவர் ஒருவர் தொடர்பில் ஜப்பான் அதிகாரிகளுக்குக் கிடைத்த ரகசிய தகவலின்பேரில் சம்பந்தப்பட்ட நபரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டுள்ளனர்.
சுங்க அதிகாரிகள் கண்ட காட்சி
டேனியல் (Daniel Isaac Velasco Baltazar, 23) என்னும் அந்த நபருடைய உடைமைகளை சுங்க அதிகாரிகள் சோதனை செய்த நிலையில், அவர் தனது சூட்கேஸ் ஒன்றிற்குள், சட்டைகளுக்குள் எதையோ மறைத்துவைத்திருந்தது தெரியவந்துள்ளது.

அது என்ன என்று பார்க்கும்போது, சட்டைகளுக்குள் சில சாக்ஸ்கள் இருந்துள்ளன.
அந்த சாக்ஸ்களுக்குள் சுமார் 200 அரிய வகை உயிரினங்களை மறைத்துவைத்து அவர் கொண்டுவந்தது தெரியவந்துள்ளது.
Mexican alligator lizards முதலான அரியவகை பல்லிகளை அவர் மெக்சிகோவிலிருந்து ஜப்பானுக்கு கொண்டுவந்துள்ளார்.
அவற்றை 3 முதல் 4 பவுண்டுகள் கொடுத்து வாங்கியதாகவும், அவை ஜப்பானில் அபூர்வம் என்பதால், 520 பவுண்டுகள் வரை விலை போகும் என்றும் டேனியல் கூறியுள்ளார்.
விடயம் என்னவென்றால், அவற்றில் சில அருகி வரும் நிலையிலுள்ள உயிரினங்கள். அவற்றை எல்லை தாண்டி இன்னொரு நாட்டுக்குக் கொண்டு செல்லவேண்டுமானால், அதற்கு உரிய அனுமதி பெறவேண்டும்.
ஆனால், டேவிட் முறையான அனுமதி இல்லாமல் அவற்றை ஜப்பானுக்குள் கொண்டு செல்ல முயன்றதால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |