ஜப்பானில் 3 பேருக்கு அதிரடியாக மரணதண்டனை நிறைவேற்றம்! என்ன தவறுக்காக தெரியுமா?
ஜப்பானில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மூன்று பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
உலகில் மரணதண்டனையை தொடர்ந்து பயன்படுத்தி வரும் ஒரு சில வளர்ந்த நாடுகளில் ஜப்பானும் ஒன்று ஆகும். இந்த நாட்டில் தற்போது வரை 100-க்கும் மேற்பட்ட கைதிகள் மரண தண்டனையில் உள்ளனர்.
முக்கியமாக இவர்கள் அனைவரும் கொடூர கொலை குற்ற செயல்களில் ஈடுபட்டதற்காக இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அக்டோபரில் புதிய பிரதமராக பொறுப்பேற்ற Fumio Kishida கீழ் கடந்த செவ்வாய் கிழமை(21.12.2021) மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கடந்த 2019-ஆம் ஆண்டிற்கு பின், ஜப்பானில் இரண்டு ஆண்டுகளுக்கு பின் மரணதண்டனை கொடுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நிகழும் கொடூர குற்றங்களை சமாளிக்க வேண்டும் என்றால், மரண தண்டனை அவசியம் என்று புதிய அரசாங்கம் கூறிய நிலையில், இந்த தண்டை கொடுக்கப்பட்டுள்ளது. டோக்கியோவில் கட்டப்பட்டிருந்த அறையில், குற்றவாளிகளான Yasutaka Fujishiro(65), Tomoaki Takanezawa(54) மற்றும் Mitsunori Onogawa(44) ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2004-ஆம் ஆண்டு 80 வயது மதிக்கத்தக்க அத்தை, இரண்டு உறவினர்கள் மற்றும் நான்கு பேரை கொலை செய்ததற்காக Yasutaka Fujishiro(65)-வுக்கு தூக்கு தண்டனையும், 2003-ஆம் ஆண்டு arcade game parlour-ல் இரண்டு பேரை கொன்றதற்காக Tomoaki Takanezawa(54) மற்றும் 44 வயதான Mitsunori Onogawa ஆகியோரும் தூக்கிலிடப்பட்டுள்ளனர்.
ஜப்பான் கடந்த 2019-ஆம் ஆண்டு மூன்று கைதிகளையும், 2018-ல் 15 கைதிகளையும், 1995-ஆம் ஆண்டு13 பேர் உட்பட பலருக்கு மரண தண்டனை விதித்துள்ளது.
இந்த மரண தண்டனை இன்று நிறைவேற்றப்படுகிறது என்றால், அவர்களுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு தான் அதிகாரிகள் தெரிவிப்பார்கள் என்று அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
உலகளவில், 18 நாடுகளில் கடந்த ஆண்டு(2020) குறைந்தபட்சம் 483 பேர் தூக்கிலிடப்பட்டனர் என்று சர்வதேச மன்னிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
இது முந்தைய ஆண்டை விட காலாண்டை குறைவு என்றாலும், வட கொரியா மற்றும் வியட்நாம், சீனாவில் நிறைவேற்றப்பட்டதாக நம்பப்படும் ஆயிரக்கணக்கான' மரணதண்டனைகள் ஆகியவை இதன் கணக்கில் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.