ஜப்பானில் கடுமையான சைக்கிள் விதிமுறைகள்: மீறுபவர்களுக்கு காத்திருக்கும் சிறைத் தண்டனை
ஜப்பானில் சைக்கிள் விபத்துக்களை கட்டுப்படுத்தும் நோக்கில் புதிய சைக்கிள் விதிமுறைகள் அறிமுகப்படுத்தியுள்ளன.
ஜப்பானில் கடுமையான சைக்கிள் விதிமுறைகள்
ஜப்பானில் தொடர்ந்து அதிகரித்து வரும் சைக்கிள் விபத்துகளை கட்டுப்படுத்தும் நோக்கில், ஜப்பான் கடுமையான புதிய சாலை போக்குவரத்து சட்டங்களை அமல்படுத்தியுள்ளது.
உடனடியாக அமலுக்கு வந்த இந்த சட்டத்தின்படி, சைக்கிள் ஓட்டும் போது மொபைல் போன் பயன்படுத்தும் நபர்களுக்கு ஆறு மாத சிறைத்தண்டனை அல்லது 100,000 யென் அபராதம் விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொபைல் போன் பயன்பாட்டுத் தடையுடன் கூடுதலாக, குடிபோதையில் சைக்கிள் ஓட்டுவதற்கும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை அல்லது 500,000 யென் அபராதம் விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய சட்டங்கள் அமலுக்கு வந்த சில மணி நேரங்களிலேயே, ஒசாகா அதிகாரிகள் ஐந்து சாலை மீறல்களை பதிவு செய்துள்ளனர்.
சாலை விபத்துக்கள்
2023 ஆம் ஆண்டில், நாடு முழுவதும் 72,000-க்கும் அதிகமான சைக்கிள் விபத்துகள் பதிவாகியுள்ளன.
இது அனைத்து போக்குவரத்து விபத்துகளிலும் 20% க்கும் அதிகமாகும்.
குறிப்பாக மொபைல் போன் பயன்பாட்டால் ஏற்படும் விபத்துகளின் அதிர்ச்சியூட்டும் அதிகரிப்பு பொது பாதுகாப்பு குறித்த கவலையை அதிகரித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |