ஜப்பானை தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கையால் மக்கள் பீதி
ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்திற்கு பிறகு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் மக்கள் பீதியடைந்தனர்.
ஜப்பானில் நிலநடுக்கம்
வடகிழக்கு ஜப்பானில் திங்கட்கிழமை இரவு 7.5 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இந்த எதிர்பாராத திடீர் நிலநடுக்கத்தில் குறைந்தது 30 பேர் வரை காயமடைந்து இருப்பதுடன், ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.

இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி இரவு 23.15 மணிக்கு ஏற்பட்டதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தின் மையம் ஆமோரி பிராந்தியத்தின் கடலோரப் பகுதியில் இருந்து 80 கி.மீ. தொலைவிலும், 50 கிலோ மீட்டர் ஆழத்திலும் அமைந்திருந்தது.
சுனாமி எச்சரிக்கை
சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து வடகிழக்கு ஜப்பான் பகுதியில் சுனாமி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன.

ஆனால் பின்னர் சுனாமி எச்சரிக்கைகள் திரும்ப பெறப்பட்டன. இருப்பினும் 70செ.மீ வரை கடல் அலைகள் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கம் காரணமாக ஆயிரக்கணக்கான வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சுமார் 90,000 குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுமாறு அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |