ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்: ரிக்டர் 6.1 அளவில் பதிவானதால் மக்கள் பீதி
வடக்கு ஜப்பானில் 6.1 ரிக்டர் அளவில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ஜப்பானில் நிலநடுக்கம்
திங்கட்கிழமை ஜப்பானின் வடக்கு பகுதியில் ரிக்டர் அளவில் 6.1 என்ற பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ஜப்பான் வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில், ஜப்பானின் ஹோக்கைடோ தீவின் தெற்கு டோகாச்சி பகுதியை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கமானது உருவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூமிக்கு அடியில் சுமார் 80 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் அதன் தாக்கம் ஒரளவிற்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சக்தி வாய்ந்த இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து ஜப்பானின் கடலோர பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மேலும் தற்போதைய நிலவரப்படி, நிலநடுக்கத்தில் உயிரிழப்புகளோ அல்லது காயங்களோ யாருக்கும் ஏற்பட்டுள்ளதா என்ற தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |