குழந்தைகளற்ற நாடாக மாறும் அபாயத்தில் பிரபல நாடு: குழந்தைகள் பிறப்பு விகிதத்தில் வரலாற்று சரிவு
தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார வளர்ச்சியில் முன்னணி நாடான ஜப்பான் கடுமையான மக்கள் தொகை சரிவை எதிர்கொண்டுள்ளது.
மக்கள் தொகை வீழ்ச்சியில் ஜப்பான்
தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் நாடான ஜப்பான், மக்கள் தொகை சரிவு என்ற பேரழிவு நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது.
தற்போதைய பிறப்பு விகிதம் தொடர்ந்து வீழ்ச்சியடைந்தால், நாடு அழிவின் விளிம்பிற்கு தள்ளப்படும் என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தோஹோகு பல்கலைக்கழக(Tohoku University) வயதான பொருளாதாரம் மற்றும் சமூகம் ஆராய்ச்சி மையத்தின் பேராசிரியர் ஹிரோஷி யோஷிடா(Hiroshi Yoshida), 2720 ஆம் ஆண்டு ஜனவரி 5 ஆம் திகதிக்குள், நாட்டில் 14 வயதுக்குட்பட்ட ஒரு குழந்தை மட்டுமே இருக்கும் என்று கணித்துள்ளார்.
இந்த அதிர்ச்சியூட்டும் போக்கை வலியுறுத்தும் வகையில் "கருத்தியல் கடிகாரம்”(conceptual clock) ஒன்றை பேராசிரியர் யோஷிடா உருவாக்கியுள்ளார்.
2012 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஆண்டுதோறும் புதுப்பிக்கப்படும் இந்த கடிகாரம், குழந்தை மக்கள் தொகை குறித்த உடனடி தரவுகளின் அடிப்படையில் விரைவாக வீழ்ச்சியடைந்து வரும் கருவுறுதல் விகிதத்தை கண்காணிக்கிறது.
சமீபத்திய கணக்கீடுகள், குழந்தை மக்கள் தொகையில் ஆண்டுக்கு 2.3% வீழ்ச்சி ஏற்படுவதாகக் காட்டுகின்றன.
இதன் விளைவாக, அடுத்த 695 ஆண்டுகளில் ஜப்பான் குழந்தைகளற்ற நாடு ஆகிவிடும் அபாயம் உள்ளது.
2023 ஆம் ஆண்டில் ஜப்பானின் பிறப்பு விகிதம் 1.20 என்ற புதிய வரலாற்றுச் சரிவை எட்டியுள்ளது. இதற்கு திருமணங்கள் குறைவடைதல், தனிமையான வாழ்க்கையைத் தேர்ந்தெடுப்போர் அதிகரித்தல் மற்றும் குழந்தை பெற்றுக் கொள்ளும் ஆர்வம் குறைதல் ஆகியவை இதற்கு முக்கிய காரணங்களாக சொல்லப்படுகிறது.
2024 ஆம் ஆண்டின் முதல் பாதியில் பிறப்பு விகிதம் மேலும் வீழ்ச்சியடைந்து 1969 ஆம் ஆண்டுக்குப் பிறகு மிகக் குறைந்த அளவை எட்டியுள்ளதாக அரசாங்க தரவு தெரிவிக்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |