லெபனானை உலுக்கிய இஸ்ரேலின் புதிய வகை தாக்குதல்: ஜப்பான் நிறுவனம் விளக்கம்
லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பு பயன்படுத்திய Walkie-talkie கருவிகள் வெடித்துள்ள நிலையில், அந்த கருவிகளை தயாரித்த ஜப்பான் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக
ஹிஸ்புல்லா படைகளை குறிவைத்து இஸ்ரேல் நூதன தாக்குதல் திட்டத்தை முன்னெடுத்து வருகிறது. முதலில் பேஜர் கருவிகள் மொத்தமாக வெடித்ததில் 12 பேர்கள் கொல்லப்பட்டதுடன் 3,000 பேர்கள் காயங்களுடன் தப்பினர்.
இதில் பலர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் தற்போது Walkie-talkie கருவிகள் வெடித்ததில் 20 பேர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 450 பேர்கள் காயங்களுடன் தப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து குறித்த Walkie-talkie கருவிகளை தயாரித்த ஜப்பானின் Icom நிறுவனம் விளக்கமளித்துள்ளது. சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தற்போது வெடித்துள்ள Walkie-talkie கருவிகளை தயாரிப்பதை நிறுத்திவிட்டதாகவும், புதிய மொடல்கள் அறிமுகம் செய்துள்ளதாகவும் Icom நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
IC-V82 என்ற இந்த மொடலானது 2004 முதல் 2014 அக்டோபர் வரையில் தங்களது நிறுவனம் தயாரித்துள்ளதாகவும், மத்திய கிழக்கு நாடுகள் உட்பட பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளதாகவும் Icom தெரிவித்துள்ளது.
அதிக செல்வாக்குடன் இருக்கும்
மட்டுமின்றி, தங்களின் Walkie-talkie கருவிகள் அனைத்தும் ஒரே தொழிற்சாலையில் தயாரிக்கப்படுவதாகவும், இன்னொரு நிறுவனம் இதை தயாரிக்கும் வாய்ப்பு இல்லை என்றும், வெளிநாடுகளில் உள்ள தொழிற்சாலைகளில் தங்கள் கருவிகள் தயாரிக்கப்படுவது இல்லை என்றும் விளக்கமளித்துள்ளனர்.
லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பு அதிக செல்வாக்குடன் இருக்கும் பகுதியிலேயே Walkie-talkie கருவிகள் வெடித்துள்ளன. மட்டுமின்றி, லெபனானின் தெற்கு மற்றும் கிழக்கிலும் Walkie-talkie கருவிகள் வெடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் இந்த விவகாரம் தொடர்பில் இஸ்ரேல் இதுவரை கருத்தேதும் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் அமெரிக்கா மட்டும் தங்கள் குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |