நான் பயத்தால் அதை செய்துவிட்டேன்! உண்மையாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்..ஹோலி சம்பவம் குறித்து ஜப்பானிய பெண் ட்வீட்
இந்திய தலைநகர் டெல்லியில் ஜப்பானிய இளம்பெண் துன்புறுத்தலுக்கு ஆளான நிலையில், தற்போது இந்தியாவை தவறாக எண்ண வேண்டாம் என ட்வீட் செய்துள்ளார்.
ஹோலி பண்டிகை
ஜப்பானைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் டெல்லியில் நடந்த ஹோலி பண்டிகையில் கலந்துகொண்டார். அப்போது சிலர் அவர் மீது முட்டையை உடைத்து ஊற்றி, தவறாக தொடுவது என துன்புறுத்தல் செய்தனர்.
இதுதொடர்பான வீடியோவை அவர் வெளியிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து ஒரு சிறார் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
Three boys arrested for forcibly coloring #japanese woman on #HoliFestival, breaking egg on her head in #Delhi. The #JapaneseWoman #tourist has left #India and gone to #Bangladesh yesterday. pic.twitter.com/c7PIsUZJXI
— Chaudhary Parvez (@ChaudharyParvez) March 11, 2023
ஜப்பானிய பெண்ணின் மன்னிப்பு
இந்த நிலையில், குறித்த ஜப்பானிய இளம் பெண் வெளியிட்டுள்ள பதிவுகளில், 'நான் இந்தியாவைப் பற்றிய அனைத்தையும் விரும்புகிறேன். நான் பல முறை அங்கு சென்றிருக்கிறேன். இது ஒரு கண்கவர் நாடு. இந்தியாவும், ஜப்பானும் என்றென்றும் டோமோடாச்சி (நண்பர்கள்).
இருப்பினும், வீடியோக்கள் மற்றும் ட்விட்டர் மூலம் பலருக்கு கவலையை ஏற்படுத்தியதற்காக நான் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இந்தியாவின் நேர்மையான அம்சங்களையும், மகிழ்ச்சியையும் தெரிவிப்பதே எனது குறிக்கோளாக இருந்தாலும், பல வழிகளில் கவலையை ஏற்படுத்தியதற்காக எனது மனப்பூர்வமான மன்னிப்பை தெரிவிக்க விரும்புகிறேன். உண்மையில் மன்னிக்கவும்' என தெரிவித்துள்ளார்.
3月9日にインドのお祭り「ホーリー」中の動画をツイートしましたが、その後想像以上にRTやDMが増えて恐怖を覚え、ツイートを削除させていただきました。
— ??めぐみこ (@megumiko_india) March 11, 2023
動画を見て気分を害された方におかれましては、誠に申し訳ございません。
அவரது மற்றொரு பதிவில், 'மார்ச் 9ஆம் திகதி, நான் இந்தியப் பண்டிகையான ஹோலியின் வீடியோவை ட்வீட் செய்தேன். ஆனால், அதன் பிறகு நான் நினைத்ததை விட ரீட்வீட் மற்றும் மெஸேஜ்களின் எண்ணிக்கை அதிகரித்தது, நான் பயந்துவிட்டேன்.
அதனால் தான் அந்த ட்வீட்டை நீக்கிவிட்டேன்.
நான் கலந்துகொண்ட இந்தியப் பண்டிகையான ஹோலிப் பண்டிகையின்போது, பகலில் ஒரு பெண் தனியாக வெளியே செல்வது மிகவும் ஆபத்தானது என்று கேள்விப்பட்டிருந்தேன். அதனால் மொத்தம் 35 நண்பர்களுடன் அந்த நிகழ்வில் கலந்துகொண்டேன்' என கூறியுள்ளார்.