ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: அலறி ஓடிய மக்கள்.!
ஜப்பானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
ஜப்பான், ஹொக்கைடோவில் இன்று மதியம் 2.48 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 ரிக்டராக பதிவாகியுள்ளது.
இன்று ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுவிக்கப்படவில்லை என்று தேசிய வானிலை நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 20 கிலோமீட்டர் (12 மைல்) ஆழத்தில் நிலைகொண்டதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
thedailyguardian
நிலநடுக்கம் ஏற்பட்டபோது, வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளின் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் வீட்டை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடத்தில் தஞ்சம் அடைந்தனர்.
இந்த நிலநடுக்கத்தால் உயிர்ச் சேதமோ, பொருட்சேதமோ குறித்த தகவல்களை அந்நாடு இன்னும் வெளியிடவில்லை. லடாக்கில் நிலநடுக்கம் லடாக்கின் லே பகுதியில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ரிக்டராக பதிவானது என்பது குறிப்பிடத்தக்கது.
Japan, Hokkaido Earthquake - North Pacific Ocean, 183.86 km (114.25 mi) east southeast of Hakodate, Hokkaido, Japan#earth44 #earthquake #earthquakes #北海道 #日本 #地震 pic.twitter.com/kuWaKgNEwA
— earth44 (@earth4444_) March 28, 2023
An earthquake of magnitude 6.1 occurred at 1448 hours in Hokkaido, Japan: National Center for Seismology
— ANI (@ANI) March 28, 2023
6.1-magnitude earthquake hits Japan's Hokkaido island
— ANI Digital (@ani_digital) March 28, 2023
Read @ANI Story | https://t.co/NoKBeWyEvJ#earthquake #Japan #Hokkaido pic.twitter.com/a86PkZ0cch