தன்னைத்தான் வாடகைக்கு விட்டு ஆண்டுக்கு 2 கோடி ரூபாய் சம்பாதிக்கும் நபர்
Japanese man making $80,000 simply by being there: ஜப்பானியர் ஒருவர், தன்னையே வாடகைக்கு விட்டு ஆண்டுக்கு 80,000 டொலர்கள் சம்பாதிக்கிறார்.
ஜப்பானை பெரிய பிரச்சினை ஒன்று ஆட்டிப்படைத்துவருகிறது. அந்தப் பிரச்சினை, தனிமை!
தன்னைத்தான் வாடகைக்கு விட்டு...
ஜப்பானில் 20 சதவிகிதம் இளைஞர்களும் இளம்பெண்களும் திருமணம் செய்துகொள்வதைத் தவிர்த்து தனியாக வாழ்ந்துவருகிறார்கள் என்பதை பலரும் அறிந்திருக்கக்கூடும். விளைவு, பலரும் தனிமையில் வாடிவருகிறார்கள்!

ஆக, இப்படி தனிமையில் வாழ்பவர்கள், பேச்சுத் துணைக்காகவும், நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காகவும் மற்றவர்களை நாடுகிறார்கள்.
அதையே தனக்கு சாதகமாக்கிக்கொண்டு மனிதர்களை வாடகைக்கு விடும் நிறுவனங்கள் ஜப்பானில் அதிகரித்துவருவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், அதை உறுதி செய்யும் வகையில், ஷோஜி மோரிமோட்டோ (Shoji Morimoto, 42) என்னும் நபர், தன்னைத்தான் வாடகைக்கு விட்டு சம்பாதித்துவருகிறார் என்னும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

ஷோஜி, இப்படி மற்றவர்களுடைய பேச்சுத்துணைக்காகவும், அவர்களுடன் விசேட நிகழ்வுகளுக்குச் செல்வதற்காகவும் ஒரு முறைக்கு 70 டொலர்கள் கட்டணம் வசூலிக்கிறார்.
ஆண்டுக்கு 1,000க்கும் மேல் ஷோஜிக்கு அழைப்புகள் வருகின்றனவாம். அவ்வகையில், ஆண்டுக்கு 80,000 டொலர்கள் சம்பாதிக்கிறார் ஷோஜி. 80,000 டொலர்கள் என்பது, இலங்கை மதிப்பில் 2,63,90,944.00 ரூபாய் ஆகும்!