மிக மோசமான நிலநடுக்கம்... இறப்பு எண்ணிக்கை 300,000 தொடலாம்: ஜப்பான் வெளியிட்ட தகவல்
ஜப்பானில் மிக மோசமான நிலநடுக்கம் ஒன்று ஏற்படும் வாய்ப்பிருப்பதாக அரசாங்கம் எதிர்பார்க்கும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பிலான தகவல்களை வெளியிட்டுள்ளது.
30 ஆண்டுகளில்
மேலும், 300,000 பேர்கள் வரையில் இறக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளதை அடுத்து, அதை கட்டுப்படுத்தவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
பொதுவாக நிலநடுக்கங்களை கணிப்பது மிகவும் கடினம், ஆனால் ஜனவரியில் ஒரு அரசாங்கக் குழு, அடுத்த 30 ஆண்டுகளில் ஜப்பானுக்கு அருகே உள்ள நான்கை பள்ளத்தாக்கில் ஒரு பெரிய அதிர்வுக்கான வாய்ப்பு 75 முதல் 82 சதவீதமாக இருப்பதை உறுதி செய்தது.
இதனையடுத்து ஜப்பான் அரசாங்கம் மார்ச் மாதத்தில் ஒரு புதிய மதிப்பீட்டை வெளியிட்டது, இதுபோன்ற ஒரு மிகப்பெரிய நிலநடுக்கம் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்படவிருக்கும் சுனாமியால் 298,000 இறப்பு மற்றும் 2 டிரில்லியன் டொலர்கள் வரை சேதத்தையும் ஏற்படுத்தக்கூடும் என்று கூறியது.
2014 ஆம் ஆண்டில் மத்திய பேரிடர் மேலாண்மை கவுன்சில் ஒரு ஆயத்தத் திட்டத்தை வெளியிட்டது, அதில் தொடர்ச்சியான நடவடிக்கைகள் பரிந்துரைக்கப்பட்டன, அவை இறப்புகளை 80 சதவீதம் குறைக்கும் என்று நம்பப்பட்டது.
ஆனால் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் இறப்பு எண்ணிக்கையை 20 சதவீதம் மட்டுமே குறைக்கும் என்று அரசாங்கம் கூறியுள்ளது. அத்துடன் புதுப்பிக்கப்பட்ட தயார்நிலைத் திட்டம் ஒன்றையும் செவ்வாயன்று வெளியிடப்பட்டது.
அதில், பொதுமக்களின் தயார்நிலையை மேம்படுத்த, தடுப்பு மற்றும் வெளியேற்றும் கட்டிடங்களைக் கட்டுதல் மற்றும் வழக்கமான பயிற்சிகள் உள்ளிட்ட துரிதப்படுத்தப்பட்ட முயற்சிகளைப் பரிந்துரைக்கப்பட்டது.
ஜூலை 5
மட்டுமின்றி, தேசம், நகராட்சிகள், நிறுவனங்கள் மற்றும் இலாப நோக்கற்ற அமைப்புகள் என அனைவரும் ஒன்றிணைந்து முடிந்தவரை பல உயிர்களைக் காப்பாற்ற நடவடிக்கை எடுப்பது அவசியம் என்று பிரதமர் ஷிகெரு இஷிபா ஒரு அரசாங்கக் கூட்டத்தில் தெரிவித்தார்.
நான்கை பள்ளத்தாக்கு என்பது ஜப்பானின் பசிபிக் கடற்கரைக்கு இணையாக இயங்கும் 800 கிலோமீட்டர் கடலுக்கடியில் உள்ள ஒரு பள்ளத்தாக்கு ஆகும், அங்கு ஒரு டெக்டோனிக் தட்டு மெதுவாக நழுவுகிறது என்றே கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த 1,400 ஆண்டுகளில், நான்கை பள்ளத்தாக்கில் ஒவ்வொரு 100 முதல் 200 ஆண்டுகளுக்கு ஒருமுறை மிக மோசமான அல்லது மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடைசியாக 1946 இல் ஏற்பட்டது.
இதனிடையே, ஜப்பானில் ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக சமூக ஊடகங்களில் ஆதாரமற்ற அச்சங்கள் பரவி வருவதால் இந்த கோடையில் ஜப்பானுக்கு வருவதை சில வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தவிர்த்து வருகின்றனர்.
மேலும், 2021 ஆம் ஆண்டு மீண்டும் வெளியிடப்பட்ட ஒரு மங்கா காமிக் புத்தகத்தில், ஜூலை 5, 2025 அன்று ஒரு பெரிய பேரழிவை ஜப்பான் எதிர்கொள்ள இருப்பதாக முன்னறிவித்தது, வெளிநாட்டுப் பயணிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |