தொப்பை இருக்கா? உலகிலேயே மிக வித்தியாசமான சட்டம் கொண்ட நாடு எது?
ஆண்டுதோறும் இடுப்பளவை சரிபார்ப்பதை கட்டாயமாக்கியுள்ளசட்டம் ஜப்பான் அமுலில் உள்ளது.
அதிகரிக்கும் உடல் பருமன்
மாறி வரும் உணவு பழக்கம், வாழ்க்கை முறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உலகளவில் பலரும் உடல் பருமனால் அவதிப்படுகின்றனர்.

உடல் பருமன், இதய நோய்கள், மூட்டு வலி, சுவாச கோளாறு, உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு வழிவகுக்கிறது.
நோயின் மருந்துகளுக்கான ஆராய்ச்சியில் முதலீடு செய்வதை விட, நோய்க்கான மூலக்காரணத்தை கண்டறிந்து அதனை சரி செய்ய ஜப்பான் திட்டமிட்டது.
மெட்டபோ சட்டம் இதன்படி, 2008 ஆம் ஆண்டே ஜப்பான் மெட்டபோ சட்டம் என்ற சட்டத்தை அறிமுகப்படுத்தியது.
உடல் பருமனை குறைப்பதே இதன் நோக்கமாகும். இந்த சட்டம் 40 முதல் 74 வயதுக்குட்பட்ட அனைத்து குடிமக்களுக்கும் வருடாந்திர பரிசோதனையை கட்டாயமாக்குகிறது.

இதில், குடிமக்களின் இடுப்பு சுற்றளவும் அளவிடப்படுகிறது. ஆண்களின் இடுப்பு சுற்றளவு 85 செ.மீக்கு குறைவாகவும், பெண்களின் இடுப்பு சுற்றளவு 90 செ.மீக்கு குறைவாகவும் இருக்க வேண்டும்.
இந்த அளவை விட அதிகமாக இருப்பவர்களுக்கு எந்த வித அபராதமும் விதிக்கப்படுவதில்லை. அதற்கு மாறாக ஊட்டச்சத்து ஆலோசனை, உடற்பயிற்சி வழிமுறைகள் ஆகியவை இலவசமாக கிடைக்கும்.
இது அரசாங்கத்தின் அதிகப்படியான தலையீடு, உடல் தோற்றத்தை வைத்து கேலி செய்யும் நிலை உருவாகும் என முதலில் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு எழுந்தது.
நாளடைவில் ஜப்பான் மக்கள் இதனை ஒரு கட்டுப்பாடாக பார்க்காமல், அரசாங்கத்தின் பரிசீலனையின் அடையாளமாகக் கருதி ஏற்றுக்கொண்டனர்.
இதன் விளைவாக நாளடைவில், உலகளவில் உடல் பருமனால் பாதிக்கப்பட்டோர் குறைவாக உள்ள நாடுகளில் ஒன்றாக ஜப்பான் மாறியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |