அமெரிக்காயுடன் ராணுவ உறவை வலுப்படுத்தும் ஜப்பான்: நிதியை வாரி வழங்க திட்டம்!
ஜப்பான் அடுத்த இந்தாண்டுக்கான அமெரிக்காவுடனே ராணுவ கூட்டமைப்பு மற்றும் போர் பயிற்சிகளுக்காக சுமார் 1 டிரில்லியன் யென்-களை அதிகமாக வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.
உக்ரைன் ரஷ்யா போருக்கு மத்தியில், ஜப்பான்-சீனாவின் கிழக்கு கடல் பகுதியில் உள்ள தீவு பிரச்சனைகளும் அதிகரித்து வருகிறது, இதனால் ஜப்பான் தங்களின் ராணுவ பலத்தை அதிகரிக்க தேவையான அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறது.
அந்த வகையில், ஜப்பான் அமெரிக்கா உடனாக ராணுவ கூட்டமைப்பு மற்றும் இணைந்த போர் பயிற்சிகளுக்காக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்த 1 டிரில்லியன் யென்கள் அதிகமாக வழங்குவது தொடர்பான (8மில்லியன் அமெரிக்க டாலர்) ஒப்பந்தத்திற்கு ஜப்பான் நாடாளுமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை அனுமதி வழங்கி உள்ளது.
AP photo eugene hoshiko
கிட்டத்தட்ட 1.5 டிரில்லியன் யென்கள் மதிப்பு கொண்ட இந்த பட்ஜெட் அடுத்து வரும் ஐந்தாண்டுகள் என 2027 வரை நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த மதிப்பானது, புதிய ஆயுதங்களை வாங்குதல், அமெரிக்க ராணுவத்துடன் கூட்டு போர் பயிற்சியில் ஈடுபடுதல், மற்றும் அமெரிக்காவில் உள்ள ராணுவ அமைவிடங்களில் அமெரிக்கா படைகள் மற்றும் ஜப்பான் நிர்வாகிகளின் பயன்பாடுகள் மற்றும் புதிய வசதிகள் ஆகியவற்றிக்காக பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
AP photo eugene hoshiko
இத்தகைய சார்பு நாட்டு நீதியானது, உறவை வலுப்படுவதற்காக மேற்கொள்ள பட்டு இருப்பதாகவும், இதில் தயவு நோக்கு ஏதும் எல்லை எனவும் ஜப்பான் அரசாங்கம் தெரிவித்துள்ளது.