சுற்றுலாவுக்கான மின்னணு விசா முறை தொடங்கியது: ஜப்பான் அமைச்சகம் அறிவிப்பு
ஜப்பான் சுற்றுலாவுக்கான மின்னணு விசா அமைப்பை தொடங்கியுள்ளது.
ஜப்பான் சுற்றுலாவுக்கு மின்னணு விசா
ஜப்பான் நாட்டிற்கு சுற்றுலா செல்ல விரும்பும் வெளிநாட்டவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக ஜப்பான் வெளியுறவு அமைச்சகம் குறுகிய கால சுற்றுலா விசாவிற்கான மின்னணு விசா அமைப்பை தொடங்கியுள்ளது.
யார் விண்ணப்பிக்கலாம்?
ஆவுஸ்திரேலியா, பிரேசில், கம்போடியா, கனடா, சவுதி அரேபியா, சிங்கப்பூர், தென் ஆப்பிரிக்கா, தைவான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (துபாய் தவிர), பிரித்தானியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் குடிமக்கள் மற்றும் வசிப்பவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
வரம்புகள் மற்றும் விண்ணப்பிப்பது எப்படி?
ஜப்பான் மின்னணு விசா அமைப்பு மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
இந்த மின்னணு விசா ஒரு முறை நுழைவுக்கு மட்டுமே செல்லுபடியாகும் மற்றும் அதிகபட்சமாக 90 நாட்கள் தங்குவதற்கு அனுமதிக்கிறது.
சீனா (15 அல்லது 30 நாட்கள்) மற்றும் வியட்நாம் (15 நாட்கள்) நாட்டவர்களுக்கு குறைந்த கால வரம்பு உள்ளது.
மின்னணு விசாக்கள் விமானம் மூலம் பயணம் செய்பவர்களுக்கும் சாதாரண பாஸ்போர்ட் உள்ளவர்களுக்கும் மட்டுமே கிடைக்கும்.
என்ன ஆவணங்கள் தேவை?
மின்னணு விசா வைத்திருக்கும் பயணிகள் விமான நிலையத்தில் "விசா வழங்கும் அறிவிப்பை" இணைய சூழலில் சமர்ப்பிக்க வேண்டும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |